Sunday, 17 September 2017

தந்தை பெரியார் 88-வது பிறந்தநாள் செய்தி



தந்தை பெரியார் 88-வது பிறந்தநாள் செய்தி


எனது விண்ணப்பம்

எனக்கு இன்று (17-9-66 பராபவ புரட்டாசி2ம் தேதி) முதல் 88-ம் ஆண்டு பிறக்கிறது. நான் பேராசைக்காரனாக இல்லாமல், இயற்கையை ஒரளவுக்காவது உணர்ந்தவனாக இருப்பவனானால் உங்கள் எல்லோரிடமும் முடிவுப் பயணம் சொல்லிக் கொள்ள வேண்டியவயேயாவேன்.
அது மாத்திரமல்லாமல் நான் சிறிதளவாவது பகுத்தறிவு உடையவனாகயிருந்தால் என் வாழ்வில், எனது இலட்சியத்தில் முழு திருப்தியடைந்து ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டியவனாவேன்.
என் உடலைப் பற்றிய எவ்வித கவலையும் இன்றி, நேர்ந்தபடி நடந்து, கிடைத்ததையெல்லாம் நேர் கூறு இன்றி உண்டு அனுபவித்து வந்த நான் 87 ஆண்டு முடிந்து 88-ம் வயதில் புகுகின்றேன் என்ற அதிசயத்தை நினைத்துத்தான் இனிமேலும் வாழ ஆசைப்படுவது பேராசை என்று குறிப்பிட்டேன்.
இலட்சிய வெற்றியிலேயே திருப்தி
அதுபோலவே தான் ஒரு சார்பும் இல்லாதவனாக தனித்து எந்த ஒரு ஆதரவும் அற்றவனாகி என்னையே எண்ணி நின்று பாமர மக்களுடையவும்,படித்தவர்களுடையவும், பிறவி ஆதிக்காரர்களாகிய பார்ப்பனருடையவும், சாவ் சக்தி உள்ள பத்திரிகைகாரர்களுடையவும், போராக்குறைக்கு அரசாங்கத்தாருடையவும் வெறுப்புக்கும், அதிருப்திக்கும், எதிர்ப்புக்கும், விஷமப்பிரசாரத்திற்கும், ண்டனை கண்டனைகளுக்கும் ஆளாக இருந்து, எதிர்ப்பையும், போராட்டங்களையும், சூழ்ச்சிகளையும் சமாளித்து பொதுமக்களால் கனவு என்று கருதப்பட்ட எனது இலட்சியங்களைஇவை கனவு அல்லஉண்மை நினைவேகாரிய சாத்தியமேஎன்று கூறிவந்து அவை (எனது இலட்சியங்)களின் நடப்புகளையும், நடப்புக்கு ஏற்ற இலட்சியத்தில் என் தகுதிக்கு ஏற்ற அளவில் முழுதிருப்தி அடைகிறேன் என்று குறிப்பிட்டேன்.
விளக்கம்

நான் காங்கிரசிலிருந்து விலகிய
1925-ம் ஆண்டிலேயே அன்றைய நிலைமைகளைக் கருதிஇனி இந்தியாவின் ஆட்சி ஜனநாயகமாகத்தான் இருக்க வேண்டும்என்று இந்த நாட்டில் முதல் முதல் கருதியவன் நான் தான். அதற்கு ஆதாரம் 1919-ல் நான் துவக்கியகுடி அரசுஎன்று பெயர் வைத்தது.
 
ஜனநாயகம்எனபது வடமொழி. அதற்கு நேரான தமிழ் மொழி தான்குடி அரசுஎன்பது.
காங்கிரசின் கொள்ளையெல்லாம் 1885 முதல் 1945 வரை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் குடியேற்ற நாட்டு அந்தஸ்து இதற்கு காந்தியார் விளக்கம் சொன்ன போதுமக்கள் இஷ்டப்படி பிரிட்டிஷ் சர்க்கார் ஆட்சி நடைபெற வேண்டும்என்று கூறினார்.
காங்கிரசில் ஒரு சிறு சாரார் தங்களை தீவிரவாதிகளாக மக்கள் கருத வேண்டும் என்ற கருத்தில்இந்தியாவுக்கு வேண்டியது பூரண சுயராஜ்யம்என்று சிலர் கூறி வந்தார்கள். இவையெல்லாம் கூட“குடி அரசுபத்திரிகை பிரசாரம் ஆரம்பித்த 10, 15 ஆண்டுகளுக்கு பிறகு தான்.
இந்த பிரச்னை அமுலுக்கு எடுத்தக் கொள்ளப்பட்டது போல் 1950 வாக்கில்இந்திய ஆட்சி ஜனநாயக ஆட்சியாக இருக்க வேண்டுமென்று பிரகடனப்படுத்தப்பட்டு விட்டது.


40 ஆண்டுகட்கு முன்பே சமதர்மம் கோரி பிரசாரம்
குடி அரசு ஆட்சியின் கொள்கை சமதர்மமாக இருக்க வேண்டுமென்று 1927, 1928ம் ஆண்டிலேயுே சுயமரியாதை இயக்க மாநாடுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றி 1930ம் ஆண்டு ஈரோடு மாநாட்டில் சமதர்மத்திற்கு விளக்க தீர்மானங்களாக :
ஒரு நபர் ஒன்றுக்கு 5 ஏக்கர் நிலத்திற்கு மேல் இருக்கக்கூடர்து என்றும், அதுவம் உழுகிறவனுக்குத் தான் நிலம் இருக்க வேண்டுமென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.1934ம் ஆண்டு சென்னை விக்டோரியா மண்டபத்தில் நடந்த ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் சுயமரியாதை இயக்க தீர்மானமாக சமதர்ம தீாமானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

அதோடு மாத்திரமல்லாமல் பொது உடைமைக் கொள்கைகளும் பிராசாரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது.
இவற்றை ஏன் இப்போது குறிப்பிடுகிறேன் என்றால் மேலே குறிப்பிட்ட எனதுகனவுகளை நினைவாக, நேரிடையாக செயல்படவிருக்கும் நிலையை மக்களுக்கு தெரிவிக்கவும், இவைகள் எனக்கு எதிர் காலத்தைப் பற்றி திருப்தி அளிக்கக் கூடியவையல்லவா என்பதை விளக்குவதற்கேயாகும்.
மற்றும் பண்டங்கள் உற்பத்தி செய்பவர்களுக்கும், உபயோகிப்போருக்கும் இடையில் எந்த உருவ தரகர்களும் இருக்கக்கூடாது என்பதும் ஈரோட்டு தீர்மானமாகும். அதுவும் நல்ல அளவுக்கு அமுலில் வர இருக்கிறது.
கல்வி இலட்சியம் நிறைவேறிவிட்டது
கல்வி விஷயம் எனது இலட்சியத்திற்கு மேலாகக் கூட போகும் போல் இருக்கிறது !அதாவது பி.யூ.சி. அன்றைய பத்தாவது வகுப்பு இன்றையபதினொன்றாவது'வகுப்பு வரை தான் சர்க்கார் அளிக்கும் இலவசக் கல்வியாக இருக்க வேண்டும். மற்ற உயர்தரக் கல்வி  தேவை உள்ள ஆள்களுக்கு மாத்திரம் சார்க்கார் கல்வி அளித்துவிட்டு பொதுமக்களை (எல்லாச் செலவும்) தங்கள் தங்கள் செலவிலேயே கற்று வரும்படி செய்ய வேண்டும். உயர்தரக் கல்விக்கு (காலேஜ் கல்விக்கு) சர்க்கார் ஒரு காசும் செலவு செய்யக்கூடாதுஎன்று சுயமரியாதை இயக்க மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறேன். ஆனால் அது அன்று எல்லா மக்களுக்கும் எல்லா செலவுகளும் சர்க்காரே ஏற்று இலவசக் கல்வியாக ஆக்கப் போவதாக தெரிகிறது.
எனவே நான் எனது இலட்சியத்தில் மனக்குறையுடைய வேண்டிநிலையில்லாதவனாக இருக்கிறேன்.இதை 45 மாதங்களுக்கு முன் காமராஜர் புகழ்ச்சியோடு வெளியிட்டார்.அதாவது
பெரியாருக்கு இன்று என்ன குறை? அவர் போட்ட பாதையில் தான் இன்று காங்கிரஸ் போய்க் கொண்டிருக்கிறது ; அவர் எதற்கும் கவலைப்படத் தேவையில்லைஎன்பதாகப் பேசினார்.

மக்களின் கவலையற்ற தன்மையே என் மனக்குறை
இனி எனக்கேதாவது குறை,கவலை இருக்குமானால் அது மக்கள் இடையில் காணப்படும் கவலையற்ற தன்மையும், எதிரிகளின் சூழ்ச்சிக்கு ஆளாகும் தன்மையும் பற்றித்தான். இந்த நிலைமை காரியத்தைக் கெடுக்கும்படியான அவ்வளவு பலம் அடைய என்றுமே முடியாது என்பதோடு, அதிக காலம் நிலைக்கவும் முடியாது. ஆகையால் அதை ஒரு குறையாகக் கருத வேண்டியதில்லை. ஆனால் சண்டித் தொல்லையாகக் கருதுகின்றேன். மனிதன் துன்பத்திற்கு ஆளாகாவிட்டாலும் தொல்லைக்கு ஆளாவது சகஜம்தான்.


புரடசிக்கு தயாராயிருங்கள் !
எனது அருமைத் தோழர்களுக்கு தேர்தல் முடியும் வரை காங்கிரசை நிபந்தனை இன்றி ஆதரித்து காங்கிரஸ் முழு வெற்றியடையப் பாடுபட வேண்டுமென்பது தான் எனது கட்டளை போன்ற விருப்பமாகும். தேர்தலுக்குப் பிறகு பெரிய புரட்சிப் பணி நமக்கு இருக்கிறது. அதற்குள் தோழர்கள் தங்கள் குடும்பப் பணிகளையும் முடித்துக்கொண்டு போர் முனைக்குச் செல்லும் போர்வீரன் போல் தாய்,தந்தை,மனைவி,மக்களிடம் பயணம் சொல்லிக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்.

ஈ.வெ.ராமசாமி


தந்தை பெரியார் 87-வது பிறந்தநாள் செய்தி



தந்தை பெரியார் 87-வது பிறந்தநாள் செய்தி


எனது விண்ணப்பம்

சுயமரியாதை இயக்கத் தோற்றம்
நான் 1925-ம் அண்டில் காங்கிரசில் இருந்து விலகிய பின் அரசியல் என்பது நமது நாட்டைப் பொறுத்தவரையில் பார்ப்பன ஆதிக்கத்திற்குப் பார்ப்பனாரால் நடத்தப்படும் போராட்டமேயொழிய, பொதுஜன நன்மைக்கேற்ற ஆட்சி முறை வகுப்பதற்கோ அல்லது வேறு எந்த விதமான பொது நல நன்மைக்கேற்ற லட்சியத்தைக் கொண்டதோ அல்ல என்பதை தெளிவாக உணர்ந்து அப்படிப்பட்ட பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதையும், எந்தக் காரணம் கொண்டும் நமது நாட்டில் இனியும் பார்ப்பன ஆதிக்கம் ஏற்பட இடம் கொடுக்கக்கூடாது என்பதையும் கருதி, பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஊற்றாக இருந்து வரும் கடவுள், மத, ஜாதித் தத்துவங்களையும், இந்தத் தத்தவத்திற்கு இடமாக விருக்கிற மூட நம்பிக்கையும், மூட நம்பிக்கையை அரசியல், கடவுள், மதம், சாத்திரம், தர்மம் ஆகியவற்றின் பேரால் வளர்க்கும் பாார்ப்பன சமுதாயத்தையும் ஒழிப்பது என்ற கொள்ளை மீது “சுயமரியாதை இயக்கம்” என்பதாக ஒரு இயக்கத்தைத் தோற்றுவித்து, நானே தோற்றுவித்தவனாகவும், தொண்டாற்றுபவனாகவுமிருந்து பல தோழர்களின் ஆதரவு பெற்று அதை நடத்தி வந்தேன். இந்த நிலையில் காங்கிரசானது அரசியல் ஆதிக்கத்தில் பிரவேசிப்பதில்லை யென்றும், சமுதாயத் தொண்டே தான் காங்கிரசின் பிரதான கொள்கை சொல்லி நிர்மாணத் திட்டம் என்னும் பேரால் பொய் நடிப்பு நடித்து மக்களை ஏமாற்றி வந்த (காங்கிரஸ்) தனது வேடத்தை மாற்றிக் கொண்டு அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்றத் துணிந்து வெளிப்படையாகவே அரசியலில் புகுந்து ஆட்சியை கைப்பற்ற முன்வந்து விட்டதையும் உணர்ந்தேன்.
அரசியலில் பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு
பிறகு எனது நிலை மேலே குறிப்பிட்டபடி கடவுள், மதம், ஜாதி, தர்ம, சாத்திர, சம்பிரதாய, பார்ப்பன சமுதாய ஒழிப்பு வேலைகளுடன், அரசியலில் பார்ப்பனர் நுழையாதபடியும், ஆதிக்கம் பெறாமல் இருக்கும்படியும் தொண்டாற்ற வேண்டிய அவசியத்திற்கு ஆளாக நேரிட்டுவிட்டது. அதாவது இவ்வளவு துறையிலும் பாடுபட வேண்டியதே எனக்கு சமுதாயத் தொண்டனாக ஆகிவிட்டது. இதன் பயனாய் எனது வேலை இரட்டித்துவிட்டதுடன் எதிர்நீச்சல் ேெபால மிக மிகக் கஃடமான காரியமுமாகிவிட்டது. எப்படி எனில் நான் கடவுள், மத, சாஸ்திர, சம்பிரதாய, ஜாதித் துறையில் பாடுபட்டால் எதிரிகள் (பார்ப்பனர்) அரசியல் துறையில் முன்னேறி விடுகிறார்கள். அரசியல் துறையில் ஈடுபட்டால் எதிரிகள் (பார்ப்பனர்) கடவுள், மத, சாஸ்திர, சம்பிரதாய, ஜாதித் துறையில் முன்னேறி விடுகிறார்கள். ஆதலால் இரு துறைகளில் மூடநம்பிக்கையுள்ள பாமரமக்கள் இடையில் வேலை செய்வதென்பது எனக்கு மேற்சொன்னபடி மிக மிகக் கஷ்டமாகவும் காட்டு வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடும் வேலை போலும் திணற வேண்டியதாகிவிட்டது,
துரோகிகளால் தொல்லை
இதற்கிடையில் எனக்கேற்பட்ட மற்றொரு மாபெரும் தொல்லையென்னவென்றால் என் தொண்டுக்கு ஆதரவாக சேர்ந்து எடத்து அணைத்து பக்குவப்படுத்தி வந்த தோழர்கள் எல்லாம் 100க்கு 100 பேரும் பக்குவமடைந்தவுடன், விளம்பரம் பெற்று பொது மக்கள் மதிப்புக்கு ஆளானவுடன் அத்தனை பேரும் எதிரிக்கு கையாள்களாகவே (எதிரிகளால் சுவாதீனம் செய்யப்பட்டு) எதிரிகளுக்கு பலவழிகளிலும் பயன்படுவர்களாகிவிட்டதோடு எனக்கும், எனது தொண்டிற்கும் எதிரிகளாக, முட்டுக்கட்டைகளாக பலர் விளங்க வேண்டியவர்களாகிவிட்டர்கள். இதற்குக் காரணம் (பிரஹலாதன், விபீஃணன் போல்) நமது ஜாதிப் பிறவித்தன்மை தான் என்று சொல்லவேண்டியதைத் தவிர எனது 40 வருட பொதுத் தொண்டின் அனுபவத்தில் வேறொன்றும் சொல்ல முடியவில்லை.
இந்த நிலையில் 40 ஆண்டுகளாகத் தொண்டாற்றி வந்து இன்றுள்ள நிலையில் எனது தொண்டின் பயனும், நிலையும் இருக்கிதென்றால் என்னைப்பற்றி அறிஞர்கள் தான் விலை மதிக்க வேண்டும்.

எதிர்ப் பிரசாரங்கள்
என்னை விட்டு விலகி எதிரிகளானவர்கள் எதிரிகளின் கையாள்களானவர்கள் ஒழுக்கத்தில் என் மீது குற்றமிருந்து, என் நடத்தையில் கோளாறு இருந்து விலகி இருப்பார்களேயானால் அதற்காக நான் வெட்கப்பட வேண்டியது தான் நியாயமாகும். ஆனால் விலகியவர்கள் அத்தனை பேரும் எதிரிகளோடு சேர்ந்தார்கள் என்பது மாத்திரமல்லாமல் எந்தக் கொள்கைக்காக என்னுடன் இருப்பதாக நடித்தார்களோ அதை அடியோடு விட்டுவிட்டு நேர் எதிரிடையான கொள்கையை மேற்கொண்டும், அதற்கு ஆக்களமளித்தும் முட்டுக்கட்டை போட்டு வருவதும் தான் நமது சமுதாயத்திற்கென்றே ஏற்பட்ட கெட்ட வாய்பப்பாகும் என்று மறுபடியும் சொல்ல வேண்டி இருக்கிறது.
விபீஷணர்களால் பார்ப்பனர் திருப்தி
இந்தியாவிற்கு சமீபத்தில் வந்து போன ஒரு ரஷ்ய பிரமுகரை ஒரு பார்ப்பனர் “இந்தியாவிற்கு யார் வந்தாலும் சங்கராச் சாரியாரைப் பார்த்துவிட்டுப் போவது தான் முக்கிய காரணம்” என்று சொல்லி சங்கராச்சாரியாரிடம் அழைத்துப் போனாராம் ! அந்த ரஷ்யா’ சங்கராச்சாரியாரிடம் பல விஷயங்களைப் பேசிவிட்டு கடைசியாக “உங்கள் நாட்டில் உங்கள் மத சம்பிரதாயத்திற்கும், உங்கள் சமுதாயத்திற்கும் விரோதமாக பெரியார் ஒரு இயக்கம் நடத்துகிறாரே அவை பற்றி உங்கள் கருத்து என்ன ? ” என்று கேட்டாராம். அதற்கு சங்கராச்சாரியார் “ ஆமாம் அப்படி ஒரு இயக்கம் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது என்றாலும் அது இன்றைக்கு பதினேழு வருடங்களுக்கு முன் வரையில் நாங்கள் மிகக் கவலை கொள்ள வேண்டிய அளவுக்கு நடந்தது. ஆனால் இந்த பதினேழு வருடமாக (1948ல் இருந்து) எங்களுக்கு அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. அதன் பாட்டுக்கு அது நடைபெறுகிறது என்றாலும் இன்று அதனால் எங்களுக்கு எந்த விதத் தொந்தரவும் இல்லை” என்று சொன்னாராம்.
“இப்படி அவர் சொல்லக் காரணம் என்ன?’ என்று அந்த ரஷ்யர் என்னிடம் வந்து கேட்டார் ஆவர் இப்படி என்னைக் கேட்கும் போது ஒரு பார்ப்பனரும் கூட இருந்தார். அதற்கு நான் சொன்ன பதில் “ அது ஒரு நல்ல அளவுக்கு உண்மை தான். எப்படியென்றால் “சுதந்தரம்” வந்த 17 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அது பார்ப்னருக்கு வந்த சுதந்தரமேயாகும் என்பதோடு அதன் பயனாய் நம்மிலிருந்து விளம்பரம் பெற்ற, மக்களிடம் செல்வாக்குப் பெற்ற ஒரு கூட்டம், பார்ப்பனருக்கு (நல்ல நிபந்தனையற்ற) அடிமைகளாகக் கிடைத்துவிட்டது. இந்த இரண்டின் ஆதரவில் பார்ப்பனர் தாங்கள் இழந்ததையெல்லாம் பெற்றுக் கொண்டதோடு மேலேறவும் அவர்களுக்கு நல்ல வசதி ஏற்பட்டுவிட்டது.
பார்ப்பன ஆட்சி மீண்டுவிட்டதே
இது மத்திரமல்லாமல் நானும் இப்படிப்பட்ட பாப்ப்பன சுதந்தரத்தை எதிர்க்கும் வேலையை விட்டு விட்டு இராஜாஜியை ஆட்சியை விட்டு வெளியேற்றி விட்டோம் என்ற ஆணவத்தாலும், காமராஜரிடத்தில் வைத்த அளவுக்கு மீறிய நம்பிக்கையாலும் ‘சுதந்தரத்தை' இ காங்கிரசை, அரசாங்கத்தை ஆதரிக்கும் பணியில் தீவிரமாக பாடுபட்டு வந்தாலும், காமராஜர் ஆட்சியை விட்டுப் போய்விட்டதாலும், அதற்குப் பிறகு "அசல் பார்ப்பனிய” ஆட்சியே தங்கு தடையின்றி நடந்து வருவதாலும், இதனால் பயனாய் சமுதாயத்துறையிலும், மதத்துறையிலும், உத்தியோகத் துறையிலும், கல்வித்துறையிலும் யாதொரு குறைவுமில்லாமல் மேலே போகும்படியான நிலையில் அவர்கள் (பர்ப்பனர்) நிலை இருப்பதாலும் சங்கராச்சாரியார் அவ்விதம் கூறி இருக்கிறார். மற்றும் இன்னறைய ஆட்சியின் பயனாய் நம் சமுதாயத்திற்கு எவ்வளவு கேடும் இழிவும் ஏற்பட்டாலும் அதை மனதார வெளியில் சொல்லி அழுது திருப்தி அடையக்கூட வாய்ப்பில்லாத நிலையில் நான் காங்கிரசை ஆதரித்துத் தீரவேண்டியவனாய் இருக்கிறேன். இது "பார்ப்பனர்களுக்கு இலாபகரமான விஷயமாகிவிட்டது’ என்று பதில் சொன்னேன். இரஷ்யப் பிரமுகர் இது கேட்டுப் புன்சிரிப்புடன் பரிதாபப்பட்டார்.
மதப்பாதுகாப்பு ஆட்சியே
நிற்க, இன்றைய “சுதந்தர” ஆட்சி ஒரு மதப் பாதுகாப்பு ஆட்சியாகவே ஆட்சி நடத்துகிறது. இதை பயனளிக்கும்படியான அளவுக்கு கிளர்ச்சி செய்யவோ, கனடிக்கவோ தக்கபடி எதிர்ப் பிரசாரம் செய்யவோ கூட தொண்டாற்ற முடியவில்லை. பத்திரிகைகள் யாவும் கூண்டோடு பார்ப்பன ஆதிக்கப் பிரசாரத்தில் இறங்கிவிட்டன். ரேடியோ, சினிமா, ஜோசியம், புராணம், உற்சவம், காலட்சேபம் ஆகியவைகளையே விளம்பரம்செய்யும் சாதனங்களாக ஒன்று கூடவிலக்கில்லாமல் எல்லா பத்திரிகைகளும் விளங்குகின்றன. இராஃடிரபதி, கவர்னர் உட்பட எல்லா மந்திரிகளும் கோவில், பக்தி பிரசாரம் செய்து வருகின்றார்கள் . அதிகாரிகள் நியமனம் பெறவும், தங்கள் குற்றங்களை மறைத்துக் கொள்ளவும், பிரமோஷன்கள் பெறவும் மந்திரிகளையே தான் பின்பற்றுகிறார்கள். காங்கிரசிலுள்ள மெம்பர்கள், காங்கிராஸ்காரர்கள் 100க்கு 90க்கு மேற்பட்டவர்கள் தங்களின் உண்மை நிலையையும், நிறத்தையும் மறைத்துக் கொள்ள மநிதிரிகளைப் பின்பற்றுவதுடன் பக்த கோடிகளாக விளங்குகிறார்கள். சமுதாய நலம் காரணமாகவே பார்ப்பனர்கள் கூண்டோடு காங்கிரசை ஒழித்துக்கட்ட, தோல்வியடையச் செய்ய பாடுபட்டாலும் , அப்பார்ப்பன சமுதாய நலத்திற்கேற்ப எல்லாக் காரியங்களையும் நமது ஆட்சி மூலம் நிறைவேற்றிக் கொள்ள மந்திரிகளும், அதிகாரிகளும், காங்கிரஸ்காரர்களுமே தெரிந்தோ, தெரியாமலோ அவர்களுக்கு எல்லாவித உதவியான காரியங்களையும் செய்து வருகிறார்கள்.
இயக்கமும் ஆதரவும் பெருகி வருகிறது
இந்த நிலையில் எனது தொண்டு இப்படிப்பட்ட காங்கிரசை, மந்தரிகளை, அதிகாரிகளை “பாதுகாப்பதற்கு” என்பதல்லாமல் வேறு எதற்குப் பயன்படக் கூடுமென்பது எனக்கு விளங்கவில்லை. இந்த நிலையில் எனக்குள்ள ஒரே ஆறுதல் என்னவென்றால் இவ்வளவு எதிர்ப்பிலும், ஏமாற்றத்திலும் எனது தொண்டுக்கு சாதனமாகவிருக்கும் சுயமரியாதை இயக்கதிலும், திராவிடர் கழகத்திலும் சுயநலமற்று தன்னலத் தியாகத்துடன் எவ்வித பிரதிப்பிரயோஜனத்தையும் எதிர்பாராமல் ஒழுக்கம், நாணயம் என்பதில் இருந்து சிறிதும் வழுவாமல் தமிழ்நாட்டில் சென்னை முதல் குமரி வரை ஒவ்வொரு குறிப்பிட்ட இடங்களிலும் ஆர்வமும் முயற்சியும் உள்ள தோழர்கள் நல்ல அளவுக்கு இருந்து எனக்கு ஆதரவளித்து உற்சாக மூட்டுவதுடன், நெறி தவறாமல், படிந்து தொண்டாற்றவது தான் எனக்கு உயிரூட்டி சலிப்படையாமல் உழைக்கச் செய்து வருகிறது. மேலும் நமது இயக்கத்தால் உழைப்பால் மனித சமுதாயத்தின் நடத்தையில் பெரிய மாறுதல் ஏற்பட்டுவிடவில்லை என்றாலும் பெருவாரியான மக்களுக்கு மனமாற்றம் ஏற்பட்டிருப்பதை உணருகிறேன். மற்றும் நம் எதிரிகளான பார்ப்பனர் “ எங்கள் நிலைமை இப்போது சீரடைந்துவிட்டது, இனி பயப்படத் தேவை இல்லை” என்று சொன்னாலும் அது வாயளவில் கொள்ளும் தைரியமே அல்லாமல் மன அளவில் அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் நடத்தையில், முயற்சியிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
பக்தி மூலம் பணவிரயம் கொஞ்சமா ?
இன்று என்றுமில்லாத அளவுக்கு கோவில் திருப்பணி, கோயில் உற்சவம், கோவில் கும்பாபிசேகம், புதுக்கோவில் உண்டாக்குதல், புராணப் பிராசாரம் செய்தல், கவர்னர், மந்திரி முதலியவர்களை ஸ்தல யாத்திரை செய்யச் செய்தல், இவைகளைப் பற்றிய விளம்பரங்களைப் பெரிய அளவில் செய்தல், பத்திரிகைகளில் எல்லாம் கடவுள் பிரசாரம், கடவுள் கதைப் பிரசாரம், மதப் பிரசாரம், சாஸ்திர தர்ம பிரசாரம், பஜனை, காலட்சேபம் செய்தல் முதலிய காரியங்களில் எப்போதையும் விட அதிகமாக மிக மிக அதிகமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.அரசாங்கத்தில் இன்று மக்களின் மூடநம்பிக்கையால், முட்டாள்தனத்தினால் சமுதாயத்தில் மிக மிக சிறுபான்மையராகிய “பெரிய ஜாதியாரும்” பணக்காரர்களும் “பெரிய படிப்புக்காரர்” என்பவர்களுமே சூழ்ச்சியால் பெரிதும் மந்திரிகளாக இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு ஒட்டு செய்பவர்கள் இவர்களைகப் பேல் 30 பங்கு அதிகமான சமுதயாத்தில் கீழ்நிலையிலிருக்கும் மக்களாக இருக்கிறார்கள் ஆனதால் மக்களை மூடநம்பிக்கையிலிருந்து ஈடேறாமல் செய்து மேலும் மேலும் மடையர்களாக ஆக்கி இன்றுள்ள நிலைமையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே செய்கிறார்கள் என்றால் மேல்நிலையிலுள்ள சிறுபான்மையோருக்கு பயம் வந்துவிட்டது, பயத்தால் துடிக்கிறார்கள் என்று தானே ஏற்படுகிறது ?
மக்கள் அறிவுபெறச் செயதல் அவசியம்
நாட்டில் படிக்காதநல்ல படிப்பு வாசனை அற்ற மக்கள் 100க்கு 80 பேர் இருக்கிறார்கள். அதுபோலவே உழைப்பாளி ஏழை மக்கள் 100க்கு 80 பேர் இருக்கிறார்கள். சமுதாயத்தில் கீழ்ஜாதி மக்கள் எனப்படுவோர் 100க்கு 90க்கு மேற்பட்டமக்கள் இருக்கிறார்கள்.இந்த நிலையில் மேல்ஜாதிக்காரர்களும், பணக்காரர்களும், படித்தவர்கள் என்று சொல்லப்படுபவர்களும் ஆட்சியிலும், ஆதிக்கத்திலும் இருக்கிறார்கள் என்றால் இந்த நிலையை ஜனநாயக சுதந்தரமென்றால் மேலே குறிப்பிட்டபடி இதற்கு மக்களின் முட்டாள்தனமும், மூடநம்பிக்கையுமல்லாமல் வேறு என்ன காரணம் சொல்லமுடியும் ? ஆதலால் தான் மக்கள் அறிவு பெற்றுச் சுயமரியாதைக்காரர்களாகி விட்டால் தங்களின் இன்றைய நிலை என்ன ஆவது என்கின்ற பயம் ஆதிக்கக்காரர்களுக்கு ஏற்படும் அளவுக்காவது நமது தொண்டு பயன்பட்டிருக்கிறது என்று சொல்லித்தானாக வேண்டும் , என்றாலும் செய்ய வேண்டிய அளவுக்கு நாம் செய்ய வேண்டியதைச் செய்யவில்லை. இமயமலை பனிக்கட்டியால் குளிரில் அவஸ்தைப்படுகிறது என்று கருதி சால்வையை மலைக்கு போர்த்துகிறவனைப் போல் நாம், காங்கிரைச “காப்பாற்று’கிற வேலையில் ஈடுபட்டுக் சமயத்துறையில் பெரிய அளவுக்கு ஏற்பட்டிருக்க வேண்டிய நன்மையை மாறுதலை இழந்துவிட்டோம் என்பதை நாம் ஒப்பக்கொண்டுதானாக வேண்டும்.
காங்கிரசை எதிர்த்திருந்தால் வகுப்பகித முறை வந்திருக்கும்
நாம் காங்கிரசை “காப்பாற்றும்” தொண்டில் இறங்காம லிருந்து இந்த 10-12 வருடத்தில் காங்கிரசை எதிர்த்து இரண்டு மூன்று முறை பதினாயிரக்கணக்கில் சிறை சென்றிருந்தால் “வகுப்புவாரி பிரதிநிதிதவ' முறையில் கணடிப்பாய் நல்ல அளவிற்கு வெற்றி பெற்றிருப்போம். கல்வித்துறையில் மேலும் முன்னுேறி இருப்போம். சமுதாயத்துறையில் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகவும், முழுஆலயப் பிரவேசம் முதலிய உரிமை பெறவுமான பல உரிமைகளை பெற்றிருப்போம். நீதித்துறையில் வக்கீல்களின் தொல்லையை நல்ல அளவுக்கு குறைத்துக் கொண்டிருப்போம். இந்த காரியங்கள் ஈடேறாமல் இருப்பதற்குக் காரணம் நமது கவனத்தை வேறு வழியில் திருப்பிக் கொண்டது பெரும் காரணமாகும். இப்போதும் நாம் இனியும் ஒன்றரையாண்டு காலத்திற்கு 18 மாதங்களுக்கு இந்தப் போக்கிலேயே இருக்க வேண்டியவர்களாய் இருப்பதால் அதற்குள் நமது நலம் வெகுதூரம் பாதிக்கப்பட்டு எதிரிகள் மிகவும் வளர்ந்து விடுவார்களோ என்று அச்சப்பட வேண்டியவர்களாகத்தான் இருக்கிறோம். நமது தொண்டுக்காக நமக்கு நமது இலட்சியத்திற்குச் செய்யாவிட்டாலும், நன்றிகாட்டாவிட்டாலும் நமது லட்சியத்திற்குக் கேடு பயக்கும் பணியையாவது காங்கிரஸ் ஆட்சி செய்யாமலிருக்கலாம். ஆனால் அபபடிக்கில்லாமல் நம்மால் காங்கிரசுக்கு, ஆட்சிக்கு “ஒரு பயனும் ஏற்படவில்லை தொல்லைகள் தாம் ஏற்படுகிறது” என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறபோது நமது நிவர்த்தி இல்லாத முட்டாள்தனத்தைப் பற்றி வெட்கப்பட வேண்டியதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
இன்று காங்கிரசுக்கு எதிராக எப்படியாவது காங்கிரசை, காங்கிரஸ் ஆட்சியை ஒழித்துக் கட்டுவது என்கின்ற இலட்சியத்தில் பொதுமக்களுக்கும், ஆட்சிக்கும் எவ்வளவோ கொடுமைகளையும் துரோகங்களையும் நாசங்களையும் நட்டத்தையும் கொடுத்து வரும் எதிர்க்கட்சிக்காரர்கள் இந்த ஆட்சியினால் மரியாதையும் பெருமையும் பெற்று வருகிறார்கள். எனவே நமது தொண்டு, எனது தொண்டு எதிரிகள் நகைக்கும்படியான பலனளித்தது என்று சொல்லி வெட்கப்படுகின்றேன்.
ஆகவே இனி நமது தொண்டு காங்சிரசுக்கு அடுத்து வரும் தேர்தலில் நல் வெற்றி கிடைக்கும்படிச் செய்ய வேண்டியது பெருங்கடமையானாலும் அதோடு அதைவிட பெருங்கடமையாகக் கொண்டும் தொண்டாற்ற வேண்டியவனாக இருக்கிறேன் - இருக்கிறோம் என்பதை கழகத் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

ஈ.வெ.ராமசாமி


தந்தை பெரியார் 86-வது பிறந்தநாள் செய்தி


தந்தை பெரியார் 86-வது பிறந்தநாள் செய்தி


நான் இப்புவியில் 85 ஆண்டுகள் வாழ்ந்து 86-வது ஆண்டில் புகுகிறேன்.
இந்த நாட்டில் மக்கள் வாழும் சராசரி வயது 10 ஆண்டுகளுக்கு முன் 32 வயதாக இருந்து, இன்று 48 வயதாக மாறியுள்ள இக்காலத்தில் ஒரு மனிதன் 85 ஆண்டு வாழ்ந்து , அதுவும் ஒய்வு என்பதை அறியாத தொண்டும், சுகம் என்பதை அறியாத வாழிவும், கிடைத்ததைத் தின்று கொண்டு, வாய்த்த இடத்தில் தூங்கிக் கொண்டு திரிந்த நான் 85 ஆண்டு வாழந்துவிட்டேன் என்றால் என் ஆயுளைப்பற்றி நான் பாராட்டிக் கொள்ள வேண்டாமா ?
என்ன செய்து சாதித்துவிட்டாய் ? என்று நீங்கள் கேட்கலாம். அதற்குப் பதில் நீங்களே (வாசகர்கள) தான் தேடிப்பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒய்வு ஒழிச்சல் இன்றி, சோம்பல் கழிப்பிணித்தனமின்றி உழைத்தேன். திருட்டு, புரட்டு, மோசடி இன்றி வெள்ளையாய் நடந்து கொண்டேன். என் நடத்தையில் பல தவறுகள், தகாத காரியங்கள் ஏற்பட்டு இருக்கலாம். என்னையே நீதிபதியாகக் கொண்டு எனக்கு சரி என்று பட்டதையும் தேவை என்று பட்டதையும் செய்தேன். அதுவும் ஒளிவு மறைவு இல்லாமல் செய்து வந்தேன்.
வாழ்வில் , செயலில் பல ஏமாற்றம் அடைந்து இருக்கலாம், ஆனாலும் அதையே ஒரு படிப்பினையாகக் கொண்டு முயற்சியில் சளைக்காமல் நடந்து கொண்டு தான் வருகிறேன்.
நன் ஒரு அநாமதேய வாழ்வு வாழவில்லை என்பதும், அநாவசிய மனிதனாய் அருந்துவரவில்லை என்பதும் எனக்கு ஒரு ஆறுதல் தரத்தக்க விசயமாய் இருந்து வந்தது.
இப்படிப்பட்ட எனது வாழ்நாள் பற்றிய விள்க்கம் என்னவென்றால் 1964 செப்டம்பர் 17-ந் தேதி வியாழக்கிழமைக்கு சரியான குரோதி வருடம் புரட்டாசி மாதம் 1-ந் தேதிக்கு எனக்கு 85 வயது முடிகிறதென்றால் அது நான் பிறந்து ஒராயிரத்து இருபது (1020) மாதங்கள் ஆகிறதுடன், நான் பிறந்து இன்றைக்கு (17-9-64-க்கு) முப்பத்தி ஒராயிரத்து நாற்பத்தேழு நாட்கள் வாழ்ந்துவிட்டேன் என்று ஆகிறது.
மற்றும் நான் 1034 ஒராயித்து முப்பத்தி நான்கு அமாவாசையையும் , 1034 பவுணர்மியையும், 1034 பிறைகளையும் கண்டவிட்டேன் என்று ஆகிறது.
“ஆயிரம் பிறை கண்டவன் முழுஆயுள் வாழந்தவனாவான்” என்று சொல்லுவார்கள். அதுபோல் முழு வாழ்நாள் வாழ்ந்துவிட்டேன்.
எனவே கிரமப்படி பார்ததால் உங்களிடம் நாண் பயணம் சொல்லிக் கொள்ள வேண்டியது தான் எனது நேர்மையான
அதற்கேற்ப எனக்கு புத்திக்கோளாறு ஒன்றும் இல்லை என்று நான் கருதினாலும், ஞபாகக் கோளாறு அதிமாகிவிட்டது. பேசப்பேச பேச்சுத் தொடர் மறந்து போகிறது, வெகு கெட்டிக்காரத்தனமாய் சமாளித்துக் கொள்ளுகிறேன். காது 100க்கு 40 சதவிகிதம் சப்தம் கேட்பதில்லை. கண்கள் கண்ணாடி போட்டாலும் 10 அல்லது 20 வரி (அதுவும் பைக்கா12 பாயிண்ட் எழுத்து)க்கு மேல் படிக்க முடிவதில்லை. கண்களில் கண்ணிர் வந்து மறைத்துவிடுகிறது. நடை 10 எட்டு, அதாவது 15 அடி தூரத்துக்கு மேல் நடந்தால் நெஞ்சுத்துடிப்பு அதிகமாகி களைப்பு வந்துவிடுகிறது. அதுவும் துணை பிடிப்பு இல்லாமல் நடக்க முடுடிவதில்லை. ஹெர்னியா என்னும் நோய் ( குடல் வாதம்) இருப்பதில் உட்கார்ந்திருக்கும் போது ஒர இளநீர் அளவு பரிணாமம் குடல் இறங்கி சிறு வலி கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நடந்தால் ஃபுட்பால் (உதைபந்து) அளவுக்கு பெருகி பெருவலி கொடுக்கிறது.
இந்தக் காரணங்களால் நானே என்னை கண்டெம்டுமேன் வேலைக்குப் பயன்படமுடியாத தள்ளப்பட்ட மனிதன் - என்றே கருதி வாழ்ந்து வருகிறேன். இவ்வளவு குறைபாடுகளும் இயலாமை யும் இருந்தும் மக்கள் என்னிடம் வைத்து இருக்கும் அன்பும்,
மரியாதையும் ஜன்னி வந்தவனுக்கு ஏற்படும் பலம் சகிப்புத்தன்மை போல் எந்நிலை அறியாத அளவுக்கு வேலைகளையும், பொறுப்புக்களையும் நானான மேற்போட்டுக் கொண்டு தொந்தரவடைந்து வருகிறேன். இப்படிப்பட்ட தொந்தரவுகளால் நான் அவஸ்தைப்படாமல் இருக்கத்தக்க வண்ணம், நோய் தெரியாமல் இருப்பதற்கு, டாக்டர்கள் குளோஃபாரம் (மயக்க மருந்து) கொடுப்பது போல் , பணம், பண்டம் (ரூபாய்) தாராளமாயக் கொடுத்து உற்சாகப்படுத்தி விடுகிறார்கள்.
ஆதலாலேயே உடல்நிலையைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் தொண்டாற்றி வர முடிகிறது என்று சொல்லுவேன். நல்ல அளவுக்கு, என் தகுதிக்கு ஏற்ப பணம் தேடிவிட்டேன். அதுவம் யாரையும் ஒரு காசு அளவுகூட தயவாய்க் கேட்காமல் வேண்டுகோள் விடுத்தும், கட்டளை இடுவதும், ரேட் (விகிதம்) ஏற்படுத்துவதும், மக்கள் தாங்களாகவே மேல்விழுந்து கொடுக்க வருவதுமான தன்மையிலேயே இயக்கத்திற்குப் பணம் சேர முடிந்தது.அதைக் கொண்டு இயக்க நடப்புக்கும், பிரச்சாரத்துக்கும், காரியாலயக் கட்டடங்களும், இடமும், வயலும், தோப்பும், காலி மனைகளும், வீடுகளும், மண்டபங்களும், பள்ளிகளும், பள்ளிப் பிள்ளைகளுக்கு பயன்படும் தங்குமிடங்களும் ஒரு அளவு ஏற்பாடு செய்துமிருக்கிறேன்.
இவைகளையெல்லாம்விட குறிப்பிடத்தக்க விஷயம் ஒன்று என்னவென்றால், திருச்சியில் ஒரு கல்லூரி ஏற்படுத்த வேண்டும் என்று இரண்டு ஆண்டுகட்கு முன் முயற்சித்து சென்ற ஆண்டில் பெண்கள் கல்லூரியாக ஏற்படுத்த அரசாங்கத்தால், யுனிவர்ஸிட்டியில் அனுமதி பெற்று செயலில் இறங்கும் போது, அதற்கு மேலும் கட்டடம், நில ஆர்ச்சிதம் முதலிய காரியங்களும், துவக்கியத்தில் அதிகச் செலவு மாத்திரமல்லாமல் பல தொந்தரவுகளும் ஏற்படுவதாயிருந்தது பற்றி சிந்தித்து, செயல்பட இருக்கும்போது, இதை அறிந்த திருச்சி தோழர்கள் பலர் திருச்சிக்கு இப்போது அவசரமாய் வேண்டியிருப்பது ஆண்கள் கல்லூரி என்று பல காரணங்களைச் சொல்லி முறையிட்டார்கள். எனது 10,15 வருச திருச்சி வாசத்தில் நான் கண்ட அனுபவம் அம்முறையீடுகளை உண்மைப்படுத்தியதால், பெண்கள் கல்லூரி விசயம் பின்னால் கவனிக்கலாம். இப்போது அவசரமாக ஆண்கள் கல்லூரி கவனிக்கவேண்டிய தாகும் என்பதாக எனக்கு தோன்றியதால், அரசாங்க கல்வி அதிகாரியை அணுகி இதற்கு யோசனை கேட்டதில் அவர்கள் அங்கு ஏற்கனவே மூன்று காலேஜிகள் ஆண்களுக்கு இருக்கின்றன. இரண்டு காலேஜிகள் பெண்களுக்கு இருக்கின்றன.மேற்கொண்டு இப்போது அவசரமில்லை என்று சர்க்கார் நினைக்கிறது” என்று சொல்லிவிட்டர்கள்.
பிறகு மேலும் அவர்களை வேண்டிக்கொண்டதன் மீது 5 லட்சம் ரூபாய் பொருளதவி செய்தால் அரசாங்கம் கவனிக்கும் என்று சொல்லிவிட்டார்கள் நாம் சொந்தத்தில் வைப்பதானால் 50 ஏக்கர் இடமும், சுமார் 4.5 லட்சம் ரூபாய் செலவிட வேண்டியதுதான கட்டிடமும், 2,3 லட்ச ரூபாய்க்கு மேலாக தளவாட சாமான்களும், இவை தவிர காலேஜ் ஏற்பட்ட பிறகு 2,3 ஆண்டுகளுக்கு மாதத்துக்கு ரூ.2000-3000 சிப்பந்திகள் செலவும் செய்ய வேண்டி வரும் என்று தெரியவந்ததால் அரசாங்க விருப்பப்படி அவர்கள் கேட்கும் தொகையைத் தருவதாக ஒப்புக்கொண்டு தொகையும் செலுத்தப்பட்டாய்விட்டது. அநேகமாக அடுத்த ஆண்டு காலேஜூம் துவக்கப்படலாம்.
மற்றபடி நமது இயக்கப் பிரசார வேலைகள் எப்போதும் போல் நடந்து வந்தாலும் சில விஷயங்களில், அதாவது நம் மக்கள் எண்ணிக்கைப்படி அரசாங்கப் பள்ளிகளிலும், உத்யோகங்களிலும், பதவிகளிலும் விகிதாசார உரிமைபெற சில கிளர்ச்சிகள் நடத்தப்பட வேண்டியது நமது சென்ற ஆண்டினுடையவும், வரும் அண்டினுடையவும் திட்டமாக இருந்தாலுமு, அரசாங்கத்தால் மற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டிய அவசியத்தை முன்னிட்டு, நாம் ஒரு அளவுக்கு அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டிய காரியத்தைச் செய்யவேண்டியது அவசியமாகத் தோன்றுகிறபடியால், மற்ற கிளர்ச்சிகளை சிறிது தள்ளிப்போட வேண்டியதாகிவிட்டதால், இப்போது அது விசயமாய் (வகுப்புவரி உரிமை விசயமாய்) பிரசார அளவில் இருக்க வேண்டியதாகிவிட்டது.
நமது அரசாங்கத்தின் சமதர்ம (சோஷியலிச) திட்டம் எளிதான திட்டம் அல்ல. அரசாங்கத்திற்கு மிகவும் சிரமமும், தொல்லை தரத்தக்கதுமான திட்டமாகும். நம் நாட்டில் பாமர மக்கள் பகுத்திறவற்றவர்களாக இருப்பதாலும், ஆதிக்கத்தில் இருந்துவரும் பார்ப்பனரும், செல்வான்களும் எந்தக் கேடான காரியமும் செய்யத்தக்க அளவுக்கு துணிவும், வசதியும் உடையவர்களாக இருப்பதாலும், இவர்கள் ஆதரவால் காலிகளும், முஸ்லீம்களும் பொறுப்பற்ற தன்மையில் அரசாங்கத்திற்கு எதிரிகளாய் இருப்பதாலும் அரசாங்கத்திற்கு பொதுமக்கள் ஆதரவு மிக மிகத் தேவைப்படுகிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அரசாங்கத்தின் சோஷியலிசத் திட்டம் நல்ல அளவுக்கு நிறைவேறும்படி செய்வோமானால், நமது திட்டங்கள் ஒரு நல்ல அளவுக்கு நிறைவேற வாய்ப்பு இருக்கிறது என்பது எனது கருத்தாகும்.
இப்போது அரசாங்கக் கலிவத் திட்டத்தினால் மக்களின் பாமரத்தன்மை ஒழிந்து வரும் என்பதில் ஆட்சேபனையில்லை. இந்த நிலை ஜாதி ஒழிப்புக்கு நல்ல ஆதரவான நிலையாகி விடும்.
பொருளாதார பேதம் ஒழியவேண்டியது அவசியமேயானாலும், முதலில் கவனம் செலுத்தவேண்டியது ஜாதி ஒழிப்பு வேலையே ஆனதால் அந்தக் காரியத்திற்கு, அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவளிக்க வேண்டியவர்களாகிறோம்.
பொருளாதார பேதம் பெரிதும் உலகமெங்கிலும் இருந்துவரும் பேதம் என்பதோடு, அதை அவ்வளவு அளிதில் ஒழித்துவிடுவது என்பது மிக்க சிரமத்தைத் தரத்தக்கதாகும். ஏன் எனில் ஆடசி ஜனநாயகமானாலும், ஆட்சியாளர்கள் ஜாதி ஆணவக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதோடு, பொருளாதார உணர்ச்சி கொண்டவர்களாக இருந்து வருகிறார்கள்.பொவாக சொல்லுவதானால் நமது நாட்டு ஆட்சியர்கள் கட்சியான காங்சிரசில் பார்ப்பனர் ஆதிக்கத்தைவிட பணக்காரர்கள் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. மந்திரிமார்கள் பெரிதும் செல்வவலான்களும், செல்வத்தைப் சேர்க்க வேண்டும் ஷஎன்ற பேராசை உள்ளவர்களாகக் காணப்படுகிறார்கள். அதோடு செல்வவான்கள் ஆட்சியில் நல்ல அளவுக்கு செல்வாக்கு பெற்றவர்களாகவும், தங்கள் செல்வ விருத்தியை முன்னிட்டே காங்கிரசை ஆதரிப்பவர்களாகவும் இருப்பதால், ஒரே சமயத்தில் இருவர் எதிர்ப்பையும் சமாளிப்பது அரசாங்கத்திற்கு பெருந் தொல்லையாக இருக்கும்.
ஆதலால் நமது மேற்கண்ட இரு திட்டங்களும் இன்று அரசியல் திட்டங்களாக இருக்கும் நேரத்தில் நாம், மற்ற திட்டங்கள் விசயமாய் பிரசாரத்திலும், மாநாடு கூட்டுவதிலும் லட்சியமாக இருக்க வேண்டியதுடன், கிளர்ச்சிக்காரர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படக்கூடாது என்பது எனது கருத்து.
நமது இயக்க தோழர்கள் இன்று எந்தக் கிளர்ச்சிக்கும் தயாராயிருக்கிறார்கள் எனபதும், கிளர்ச்சி துவக்காத காரணத்தாலேயே என் மீது பலருக்கு சலிப்பு என்பதும் எனக்கு தெரியும். ஆனாலும் நமக்கு, அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பதும், ஆட்சியின் சோஃயலிச் திட்டநடப்புக்கு எதிராக ஏற்படும் சமுதாய விரோதிகளின் கிளர்ச்சியையும், தொல்லைகளையும் முறியடிப்பதும் தான் இன்று முக்கியமான காரியமாக இருக்கவேண்டும். காங்கிரசுக்கு நம்மால் கூடியவரை பலம் ஏற்படும்படி செய்ய வேண்டும்.
தமிழர்களாகிய நமக்கு பெரிதும் அவரவர் சுயநலம் தான் முக்கியமே தவிர இனநலம் அலட்சியமாகக் கருதக்கூடியதாக இருந்து வருகிறது. ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால், தமிழன் என்ற உரிமையால் பதவிக்கு வந்து ஒட்கொடுக்கும் தமிழர்களில்100-க்கு 90 பேர் அரசாங்க எதிரிகளாகவும் எதிரிகளின் கையாட்களாகவும் இருக்கிறார்கள்.இன்று அரசாங்கத்துக்கு தமிழர்களில் படித்தவன் ஆதரவும் இல்லை. பணக்காரன் ஆதரவும் இல்லை. பதவி பெற்று ஒய்வெடுத்தவர்கள் ஆதரவுமில்லை. இது மாத்திரமல்லாமல் அரசாங்க பெரும்பதவி, சிறு பதவியில் இருப்பவர்கள் ஆதரவும் இல்லை. நாம் அப்படிப்பட்ட பிறவியாளர்களாக ஆகிவிட்டோம்.
ஆனதனால் நம் தலையில் விழுந்திருக்கும் பொறுப்பு மகத்தானது. இன்னும் சொல்ல வேண்டுமானால் அரசாங்கம் நம்மை ஒரு நல்ல அளவுக்கு நம்பித்தான் இவ்வளவு தீவிர திடட்த்தில் இறங்கி இருப்பதாக உணருகிறேன். இப்போது நாம் மேற்சொன்னபடி நிபந்தனை அற்ற ஆதரவாளர்களாக இல்லையானால் நாமும் மேற்கண்ட தமிழர் விரோதிகள் கூட்டத்தில் சேர்ந்தவர்கள் ஆகிவிடுவோம்.
இன்று தமிழர் சமுதாயத்திற்கு மாத்திமல்லாமல், ஏழை எளியவர்கள் சமுதயாத்திற்கும் இரட்சகர் என்கின்ற முறையில் காமராஜர் இருந்து வருகிறார். அவர் இல்லாவிட்டால் உள்ளது ஒன்றுமே இல்லை. இருக்கவேண்டியது ஒன்றுமே இல்லை எனபது மாத்திமல்லாமல் எல்லாக் கேடுகளும் நம்மைச் சுற்றிக்கொண்டு இருக்கும்.
எனவே காமராஜரை உற்சாகப்படுத்தும் அளவுக்கு நமது ஆதரிப்பு ஆட்சிக்கும், காங்கிரசுக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும். இன்றியமையாத அவசியமாகும்.
இதுவரை நாம் ஒன்றும்செய்யவில்லை என்று கருதிவிடாதீர்கள். அரசியல் ரீதியில் இன்று காங்கிரசுக்கு, காமராஜருக்கு எதிர்ப்பு இல்லாமல் ஆக்கியது, நமது இயக்கம் தான். பார்ப்பான் குள்ளநரி ஆகிவிட்டான். முஸ்லீம்லீக் இன்று சொல்லாக்காசு ஆகிவிட்டது. கண்ணிர்த்துளி நாட்டுக்கு நியூசென்சாகிவிட்டது. இது யாரால் ? இதற்கு காங்கிரஸ் என்ன பாடுபட்டது ? ஆதலால் நாம் ஒன்றும் செய்யவில்லை என்று கருதி விடக்கூடாது.
ஆகவே நாம் ஒன்றும் செய்யவில்லை என்றால், நமக்கு திட்டமில்லை என்றே, கருதாமல் சலிப்படையாமல் நமது தோழர்கள் கடவுள், மதசாஸ்திர, சம்பிரதாய ஒழிப்புக்காரியங்களைத்திட்டமாகக் கொண்டு பிரசாரம் செய்வது, மாநாடு கூட்டுவது ஆகிய காரியங்களில் ஈடுபட்டு தீவிரமாகக் காரிங்கள் செய்ய வேண்டிக்கொள்ளுகிறேன்.
கழக ஸ்தாபனங்கள், மாநாடுகள் கூட்ட வேண்டும். காங்கிரஸ்காரர்களை அவர்கள் கலந்து கொள்ள ஆசைப்படும் அளவுக்கு அழைக்கலாம்.நாமும் அவர்கள் விரும்பும் அளவுக்கு கலந்து கொள்ளலாம். நம் தனிமையை எப்போதும் மறந்துவிடாமல் தொண்டாற்றலாம்.
இது தான் எனது 86-ம் ஆண்டு வேண்டுகோள் செய்தியாகும்.
ஈ.வெ.ராமசாமி


தந்தை பெரியார் 85-வது பிறந்தநாள் செய்தி

தந்தை பெரியார் 85-வது பிறந்தநாள் செய்தி


சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளைாக எனது பிறந்தநாள் பாராட்டுக் கூட்டம் (விழா) என்பதில் நான் பாரட்டுதலுக்கு நன்றி செலுத்தும் போது அடுத்த ஆண்டு வேலைத்திட்டம் என்பதாக ஏதாவது ஒரு திட்டத்தை வெளியிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அப்படி வெளியிடுவதில் நான் பெரிதும் சமுதாய சம்பந்தமான குறைபாடுகளை, மத சம்பந்தமான மூட காட்டுமிராண்டித்தனமான கருத்து, செய்கை ஆகியவைகளைப் போக்குவதற்கு ஏற்றதான திட்டங்களையே வேலைத் திட்டமாகச் சொல்லி (வெளியிட்டு) வந்திருக்கிறேன். அப்படிச் சொல்லிவருவதில் சொல்லுவதற்கேற்ப ஒரு அளவுக்கு அது நிறைறுேம் வண்ணம் கிளர்சசியோ முயற்சியோ கழகத்தின் மூலம் செய்தும் வந்திருக்கிறேன். ஆனால் அவை எல்லாம் நிறைவேற்றம் அடைந்தது என்று சொல்லுவதற்கு இல்லாவிட்டாலும் ஏதோ சிறு அளவுக்காவது வெற்றியும் வெற்றி முகமும் ஏற்பட்டு வருவ துடன் மக்களிடையில் அத்திட்டத்தின் அவசியம் பற்றிய உணர்ச்சி வளர்ச்சி அடைந்து வந்திருப்பதை நான் உண்மையாகவே உணருகிறேன்.

மறுக்க முடியாத புரட்சித்திட்டங்கள்

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அத்திட்டங்கள் எவ்வளவு புரட்சிகரமானதாக இருந்தாலும் அவற்றில் எதையும் வாயளவில் கூட மறுக்கும்படியான எதிர்ப்புக் காரியங்களை இதுவரை நான் எந்த கூட்டத்தாராலும் எந்தத்துறையிலாவதும் காணவே இல்லை.
பொதுவாக பார்ப்பனர்களுடையவும் மத உணர்ச்சியாயருடையவும் வெறுப்பைப் பெற்று வந்திருக்கிறேன் என்பதை நான் மறுக்கவில்லை. இந்த வெறுப்புத்தன்மை எனது திட்டங்களுக்கு பாமர மக்களாலும்கூட ஏற்படுவது என்பது அதிசயமாகாது. ஏனெனில் நம் மக்கள் 100க்கு 90 பேர் எழுத்து வாசனை அற்றவர்கள். படித்த மக்களில் 100க்கு 99 பேர் மூட நம்பிக்கையில் மூழ்கிப் பேராசை கொண்டவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நமது திட்டங்கள் அவர்களுடைய சுயநலத்திற்குக் கேடு ஏற்பட்டதாகவே கருதி நம்மீது வெறுப்புக்கொண்டு தான் வந்திருக்கிறார்கள்.


வெறுப்பிலும் - எதிர்ப்பிலும் முன்னேற்றம்


இந்த வெறுப்புக்களை நான் குழந்தைகள் மருந்து சாப்பிட, தங்கள் எதிர்ப்பைக் காட்டுவது போன்றது என்று கருதி “எதிர்ப்பை” வெறுப்பை இலட்சியம் செய்யாமல் தொண்டாற்றி வந்திருக்கிறேன்.
அத்தொண்டுகள் அடியோடு வீணாகிவிட்டன என்று சொல்லமுடியாமல் நாடும், கொடுமைக்கும் மடமைக்கும் ஆளான சமுதாயமும், நல்ல அளவுக்கு முன்னேறியே வருகிறதைப் பார்க்கின்றேன்.
இதற்கு எடுத்துக்காட்டு என்னவென்றால் நாடு, சமுதாயம், முன்னேற்றத்தினால், இன்று எந்த சமுதயாத்திற்கு “கேடு”நெருங்கி வருகிறதோ அந்த சமுதாயம் தங்களது கடைசி ஆயுதத்தை இன்று பயன்படுத்த முன் வந்து இருப்பதே போதுமானதாகும்.

கடவுள், மதம், சாதி செத்த பிணமே


சாதாரணமாகச் சொல்லுவதானாலும் கடவுள், மதம், ஜாதி என்கின்றதான மாயப்பேய்கள் இன்று செத்து பிணங்களாகிவிட்டன என்றே சொல்லலாம். இவற்றில் ஈடுபட்டவர்கள், இவற்றால் பயனடைந்தவர்கள் இப்பிணங்களுக்கு சமாதி கட்டும் வேலையில் தான் இன்று ஈடுபட்டிருக்கிறார்களே ஒழிய, கொஞ்சமாவது உயிர் இருக்கிறது என்று கருதி, யாரும் பிழைக்க வைக்க முயற்சிக்கவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது, என்றாலும் கூட இந்த சுயநலமெளடிக கும்பல்கள் மக்களளை, சமாதியைக் காட்டி ஏமாற்றிப் பிழைப்பதிற்கில்லாமல், மேலும் சில வேலை செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை நான் மறைக்கவில்லை. மேலும் பணி உளது ஆனால் தொல்லை மிகுதி



ஏனென்றால் மக்களின் மடைட அவ்வளவு முதிர்ந்ததாக இருக்கிபடியாலும் எதிரிகள் கடைசி முயற்சி செய்கிறபடியாலும் நமக்கு இப்போது வேலை இல்லை என்று சொல்லுவதற்கு இல்லை. மற்றும் நமக்கு இன்று மற்றொரு புதிய தொல்லை ஏற்பட்டிருக்கிறது. அது என்ன தொல்லை என்றால் அதுவரை நாம் பார்ப்பனர் தொல்லைக்குப் பரிகாரம் தேடும் பணியில் முனைந்து இருந்தோம். இப்போது நாம் பார்ப்பனர் மாத்திரமல்லாமல் முஸ்லீம்களுடையவும் கிருஸ்தவர்களுடையவும் தொல்லையைச் சமாளிக்க பரிகாரம் தேட வேண்டியவர்களாக இருக்கிறோம். இத்தொல்லையை சுலபமான தொல்லை என்று கருதிவிட முடியாது. கஷ்டமான தொல்லை என்று தான் சொல்ல வேண்டும்.


நான் 85வது ஆண்டுக்கு வேலைத்திட்டமாக நமது சமுதாயம், நமது பார்ப்பனர் அல்லாத சமுதாயமாகிய “4ம் சாதி” “சூத்திரர்’ என்று பார்ப்பனரால் ஆக்கப்பட்டு அதற்கு ஏற்ப இழிமக்களாகவும் கல்வி அறிவுற்ற காட்டுமிராண்டி மக்களாளகவும் இருக்கச் செய்யப்பட்ட நாம், கல்வி, நல்வாழ்வு, ஆட்சி உரிமை முதலாகியவற்றில் நம் சமுதாயம் (எண்ணிக்கைக்க ஏற்ப) விகிதாசாரம் அடைய வேண்டும் என்கின்ற சில இலட்சியத்தைப் பெறும்படியான பணியை வேலைத் திட்டமாகக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.




வகுப்பு விகிதாசார உரிமைநேமது இலட்சியம்

இதை மிகக்கடினமான வேலைத்திட்டம் என்றுதான் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த நாட்டில் பார்ப்பன சமுதாயத்தின் உயிர்-ஜீவநாடியே இது தான். அதாவது நம்மை மேற்கண்ட இழிவான அடிமை நிலையில் வைத்து இருப்பது தான். எப்படி என்றால் , ஆட்சியில் நமக்கும் அவர்களுக்கும் சமுதாய எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதாசாரம் ஏற்பட்டுவிட்டது என்றால் அந்த நிமிடமே “பார்ப்பான் (பிராமணன்) செத்தான்’ என்று ஆகிவிடும். அதுமாத்திரம் அல்லாமல் சூத்திரன், இழிமகன், மூடக்காட்டுமிராண்டி மகன் என்பவனும் ஒழிந்தான். சரிநிகர் மனித சமுதாயந்தான் நம் நாட்டில் இருக்கிறது என்பதாக ஆகிவிடும். ஆதலால் நம் இலட்சியம் நிறைவேற பார்ப்பான் தன்னுடைய எல்லாவற்றையுமே செலவழித்துப் பார்ப்பான். ஆனதினாலே இந்த நமது இலட்சியம் மிகக் கஷ்டமானது என்று கருதினேன்.

உதாரணமாக, நம்மில் கீழ்த்தரமான மக்களையெல்லாம் பார்ப்பான் இன்று தன்னோடு இணைத்துக் கொண்டு, அவர்களையும் நம் சமுதாய நலத்துக்கு எதிரிகளாக ஆக்கி தொல்லைகொடுத்துக் கொண்டு இருந்த பார்ப்பனர் இன்றைய நிலைக்கு தனக்கு அந்த பலம் போதாது என்று கண்டுகொண்டவுடன் புதிய பலத்தை உண்டாக்கிக் கொள்ள முயற்சித்து அதில் வெற்றி பெற்றுவிட்டனர்.
ஆந்த புதிய பலம் என்னவென்றால் , நம் நாட்டில் பார்ப்பனர்களைப் போலவே உள்ள மற்றும் சிறு சிறு (மைனாரிட்டி) வகுப்புகளான முஸ்லீம்களையும் கிறிஸ்துவர்களையும் தன்னோடு சேர்த்துக்கொண்டனர்.




நமது சமுதாயத்தின் நான்கு எதிரிகள்


ஆதலால் நாம் இன்று பார்ப்பனர்; 2.நம்மில் கீழ்தர மக்கள் ; 3.முஸ்லீம்கள் , 4கிறிஸ்துவர்கள் ஆக இன்று நமக்கு சமுதாய எதிரிகளாக இருந்த நான்கு கூட்டங்கள் (குழக்கள்) இருக்கின்றன. இந்நால்வரும் ஏற்கனவே நம் சமுதயாத்தைப் பற்றிக் கவலை இல்லதாதவர்கள். மற்றும் இந்நான்கில் மூவர், தம்தம் சமுதயாத்துறையில் நம்மைவிட மேலான நிலைமையில் அரசியல், பொருளாதார இயல், கல்லி இயல், பதவி இயல், மத இயல் முதலியவற்றில் சராசரித் தன்மைக்கு மிகமிக மேலான நிலைமையில் இருப்பவர்கள், வாழ்பவர்கள என்று சொல்லத்தக்கவராவார்கள்.ஒரு கூட்டத்தினர் நம்முடைய இழிநிலை பற்றியும் - ஏன்-தங்களுடைய இழிநிலை பற்றியும் கூட கவலை இல்லாமல் “சோறு-சீலை-காசு” ஆகிய மூன்றையுே வாழக்கை இலட்சியமாகக் கொண்டவர்கள் ஆவார்கள். ஆதலால் ஒருசிறு நலத்திற்கும் தங்களுடைய எதையும் தியாகம் பண்ணவும் துணிவு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

ஆகையால் நமது இலட்சியம் நிறைவேறுவதற்கு இவர்கள் இந்நான்கு குழுவினர்களும் பெரும் கேடர்களாக இருக்கும் நிலைமை நமக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலை நம் வளர்ச்சியையும் நம் இன்றைய நல்வாழ்வையும் சிதைத்துவிடும் என்றே கருத வேண்டியிருக்கிறது.


காமராசர் ஆடசியில் என்றுங்காணா முன்னேற்றம்

இந்நிலை இன்று ஏற்படக் காரணம் இதுவரை இல்லாத அளவுக்கு காமராசர் ஆட்சி காரணமாக தமிழ் மக்களாகிய நாம் பெரும் அளவுக்கு முன்னுேறி வருகிறோம். இதைச் சிதைக்க வேண்டிய அவசியம் பார்ப்பனர்ருக்கு ஏற்பட்டுவிட்டது. அவர்கள் (பார்ப்பனர்கள்) தனித்துநின்று நம்மை எதிர்த்து அழிக்கமுடியாது, ஆதலால் துணைதேட முயன்றார்கள். அம்முயற்சியில் ஏனைய முக்குழுவினர் அவர்களுக்கு கிடைத்துவிட்டார்கள். ஏனெனில் இவர்களுக்கு எவ்வித கொள்கையும் கிடையாது. யாரை அண்டியாவது எப்படி நடந்தாவது தங்கள் நலன் ஒன்றே இலட்சியமாகும் , நாம் வகுப்புவாரி உரிமை கேட்கும் போது அந்தப்படி நாம் அடைந்துவிட்டால் இவர்கள் நலம் கெடும் என்கின்ற குறை அச்சம் ஏற்பட்டுவிட்டது. ஆதலால் இவர்கள் எளிதில் பார்ப்பனர் வலையில் பட்டுவிட்டனர்!

பார்ப்பனர் -முஸ்லீம் பரஸ்பர உதவி மற்றும் ஆச்சாரியார், முஸ்லீம்களை மயக்கி காஃ/மீரை முஸ்லீம்களுக்கு (பாகிஸ்தானுக்கு) பொடுத்து விட வேண்டியது நியாயாம் என்று சொல்லிவிட்டார். இதற்கு முஸ்லீம்கள் நன்றி காட்டும் முகத்தான் இராஜிாஜிக்கு இந்திய பிரதமர் பதவி கொடுக்க வேண்டும் அவர்தான் அதற்கு தகுதி உடையவர் என்று பாகிஸ்தான் தலைவர் அய+ப்கான் சொல்லி, இந்நாட்டு முஸ்லீம்களை ஆச்சாரியாரை ஆதரிக்கச் செய்துவிட்டார்.
மற்றும் நமது பகுத்திறவுக் கிளர்ச்சியும் நேருவின் சோஸியலிசக் கொள்கையும், இஸ்லாம் கிருஸ்துவ சமுதாயத்திற்கு அவர்கள் மதத்திற்கு கேடு வரும் என்ற புரளியை பார்ப்பனர் கிளப்பிவிட்டு விட்டார்கள். இதனாலேயே முஸ்லீம் கிருஸ்துவ சமூகத் தலைவர்களான திரு.இஸ்மாயில் அவர்களும் திருரத்தினசாமி அவர்களும் இவ்விரு சமுதாயமும் இராஜாஜியை ஆதரிக்க வேண்டும் என்று கட்டளை இட்டு விட்டார்கள்.
ஆகவே இனிவரும் தேர்தல்களில் இம்மூன்று குழுவினரும் தங்களுக்கு வெற்றி கிடைக்க வகை இல்லை என்று தெரிந்தாலும், நம்மில் இருந்து கொண்டே தங்கள் சுயநலத்துக்கு, நம் இனத்துக்குக் கேடு செய்து வாழ்வது, என்ற முடிவில் ஆச்சாரியாரை அண்டி இருக்கும் கண்ணிர்த்துளிகளைத் தான் ஆதரிக்க வேண்டும் , எப்படியாவது காமராஜரை தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்ற சதித்திட்டம் ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றனர்.

இதன் பயன் என்ன அகும் என்றால் இனி தேர்தல்களில் இரண்டு கட்சி போட்டி! அப்போட்டியில் காமராசர் (காங்கிரஸ்) கட்சி, தமிழர்களின் ஒட்டுக்களை அதிகமாய் (மெஜாரிட்டியாய்) பெற்றாலும் இந்தப் பாப்பனர், முஸ்லீம், கிருஸ்துவர்கள் ஆகிய முக்குழுவும் எந்த கட்சிக்கு ஒட்டு செய்வார்களோ, அந்தக் கட்சி தான் ஜெயிக்க முடியும். திருவண்ணாமலை தேர்தல் முடிவு அப்படித்தான் ஏற்பட்டது. நம் தமிழ் மக்களின் ஒட்டு நமக்கு அதிகமாய் கிடைத்து இருந்தும் இந்தக் குழுவினர் ஒட்டுக்களாலேயே காமராசர் (தமிர்கட்சி) தோல்வி அடைய வேண்டியதாயிற்று. அவர்கள் 3 பேர்கள் நமக்கு எதிரிகளாகி, நம் எதிர்கட்சிக்கு ஒட்டு செய்தால் அது நமக்கு பெருங்கேடாகவே முடியும்.


ஆச்சாரியார் தந்திரம்


இதற்கு ஆகத்தான் இராஜாஜி “ காங்கிரஸ் மெஜாரிட்டி சமுதாயக் கட்சி ஆனதால் அதனால் மைனாரிட்டி சமுதயாத்திற்கு கேடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள மைனாரிட்டி சமுதாயம் ஒன்றாக சேர்ந்து கட்டுப்பாடாக இருக்க வேண்டும்” என்று கூறி கூட்டுச் சேர்ந்த்துக் கொண்டு துணிந்து எதிர்க்கிறார்.


விகிதாசாரம் ஒதக்குவதே பரிகாரம்


இதற்குப் பரிகாரம் தேடவில்லையானால், நாம் என்னதான் பிரசாரம் செய்தாலும் கட்சியை பலப்படுத்தினாலும் , வெற்றி கிடைப்பது முடியாத காரியமாக ஆனாலும் ஆகிவிடலாம் ஆனதால் மைனாரிட்டிக் முழுவோடடினால் மெஜாரிட்டி கெடாமல் இருக்க அவர்களை தோதலில் ஒதுக்கிவிடுவதே தக்க மார்க்கமாகும். குறைந்தது அவ்விரு சமுதாயத்திறகுமாவது தனித்தொகுதி கொடுத்து ஒதுக்கி விட்டுவிட்டால் பெரும் அளவிற்குத் தொல்லை ஒழியும் என்பது எனது கருத்து. அதோடு கூடவே வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்னும் பேரால் தமிழர்,பார்ப்பனர், முஸ்லீம், கிறிஸ்துவர் என்கின்ற தலைப்பில் அவரவர் சமுதாய எண்ணிக்கைப்படி அரசாங்கத்திற்குள்ள எல்லாத் துறையிலும் இவ்வாறு பிரித்துவிட்டால், தமிழ்நாட்டை, தமிழ் மக்களைப் பிடித்த எல்லா கேடுகளும் ஒழிந்தே போகும்.

வகுப்புரிமைக் கிளாச்சித் திட்டம்

ஆகவே இதைத்தான் எனது 85-வது அண்டுத் திட்டமாக நான் கொண்டிருக்கிறேன்.
இவற்றிலும் முதலாவது நம்நாட்டு ஆட்சியில் நாம் அடையவேண்டிய வகுப்புரிமைக்கு கிளாச்சி செய்வதை
உடனடித்திட்டமாய் கொண்டிருக்கிறேன்.

நம் இயக்கத் தோழர்கள் ஆயத்தமாய் இருக்க வேணடிக் கொள்ளுகிறேன்.

ஈவெராமசாமி





Monday, 11 September 2017

நுழைவுத் தேர்வு கூடாது!-17.7.1972

நுழைவுத் தேர்வு கூடாது!


கல்வித் துறையில் அரசாங்கம் பெரிய பார்ப்பனியம் செய்து வருகிறது. அடுத்த ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேருவதற்கு நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்குத் தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளதாம்! எதற்காக? பாஸ் செய்த சர்ட்டிபிகேட்டில் காலேஜில் சேர - சேர்த்துக் கொள்ளத் தகுதி உடையவன் என்று எழுதி, கையெழுத்துச் செய்து கொடுத்துவிட்டு, காரியத்தில் மார்க்குப் பார்த்து, திறமை பார்த்து, புகுமுகப் பரீட்சை வைத்துச் சேர்க்க வேண்டும் என்று உத்திரவு போடுவதும் தராதரம் பார்க்காமல் சேர்க்கக்கூடாது என்பதும் பார்ப்பனியமா? அல்லவா? ஏனென்றால், இவை பார்ப்பான் மூளையில் தோன்றியதுதானே?

பிற்படுத்தப்பட்ட வகுப்பு, தாழ்த்தப்பட்ட வகுப்பு என்பவர்களைக் கல்வி விஷயத்தில் குழியில் தள்ளி மூடுவதுதானே இந்த யோசனையின் பலன்?

கல்வித்துறையில் அதிகாரம் பிற்படுத்தப்பட்ட வகுப்பார், தாழ்த்தப்பட்ட வகுப்பார் கையில் இருந்தால் இந்த எண்ணம் அவர்களது ஞாபகத்துக்கு ஆவது வருமா? மொத்த ஜனத்தொகையில் முற்பட்ட வகுப்பு மக்கள் எவ்வளவு? பிற்படுத்தப்பட்ட வகுப்பார் ஜனத்தொகை எவ்வளவு? வரி கொடுப்பதில் யார் 1 க்கு 3 ஆக, 4ஆக வரி கொடுக்கிறார்கள்? ஓட்டர்களில் அதுபோல் யார் அதிகம்? நாளைக்குப் பதவிக்கு, நிருவாகிகள் ஆசைப்பட்டால் ஓட்டர்களில் இதை எண்ணிப் பார்க்கமாட்டார் களா? கல்வித் துறையில் பார்ப்பன ஆதிக்கத்தை உயிருக்குத் துணிந்து ஒழித்ததன் பலன் இதுதானா? இராஜாஜி, பக்தவத்சலனார் உத்திரவுகளுக்கும் இதற்கும் என்ன பேதம்? இதனால் யார் பயனடைவார்கள்?

உத்தியோகத்திற்குத் தகுதி _ திறமை பார்ப்பதே யோக்கியமற்ற காரியம் என்று 40 ஆண்டுகளாகச் சொல்லிப் போராடி வருகிற நான், பாஸ் செய்தவனைப் பள்ளியில் சேர்ப்பதற்குத் தரம் பார்க்கவேண்டுமென்றால் பெரிதும் ஜாதித் தரம் தவிர வேறு தரம் என்ன? நாம்தான் பாஸ் பண்ணாதவனைப் பெயில் ஆக்குகிறோமே! தகுதி _ திறமை பார்த்துச் சேர்க்கப்பட்டவனும் பெயில் ஆகிறானே?

நான் மனித சமுதாயத்தின் தகுதி, தரம் என்பவைகளைப் பார்த்து வந்த அனுபவமுடை யவன், அவைகளைப் பற்றி நான் எழுதி வந்த கருத்துகள் இன்னமும் இருக்கின்றன. பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு ஆக, தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்கு ஆக உழைத்து வந்தவன் _ வருபவன் நான். மந்திரிகள் முதல் அவர்களில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஆகித் தீரவேண்டும் என்பவன்.

கல்வி விஷயத்தில் இந்த ஆட்சியைவிட காமராஜர் ஆட்சி மிக்க தேவலாம் என்று ஆக்கிவிடக்கூடாது.

பாஸ் செய்த பின்பு தகுதி, திறமை, தரம் எதற்காகப் பார்க்கப்படுகிறது? அது எதற்காக வேண்டும்? அதன் அர்த்தம் என்ன? அதன் பலன் என்ன? மந்திரி சபையில், பெரிய பதவியில், அதிகாரத்தில் தரமுள்ளவர்களால், திறமை உள்ளவர்களால் ஏற்பட்ட நன்மை பெருமை என்ன? தகுதி, திறமை, தரம் அற்றவர்களால் ஏற்பட்ட கெடுதி என்ன? அதிகாரம், உத்தியோகங் களிலும் வகுப்பு, உள்வகுப்பு, உட்பிரிவு, ஜாதி வகுப்புரிமை வேண்டும். சர்க்காருக்கு 50 கோடி ரூபாய் மது இலாகா மூலம் வருவாய் கிடைத்திருக் கிறது. இது யார், எந்த வகுப்பார் தந்த பணம்? இந்த வருவாய் கொடுத்தவர்களை வடிகட்டுவது தான் பலனா? இதைக் கவனிக்கவேண்டும்.

கண்டிப்பாய் அரசாங்க அகராதியில் தகுதி, திறமை, தரம் என்ற சொற்களை எடுத்துவிட வேண்டும்.

இது என் சொந்தக் கருத்து.

---------------------------
தந்தை பெரியார் "விடுதலை" 17.7.72

(தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சராக இருந்த டாக்டர் நாவலர் அவர்கள் நுழைவுத் தேர்வைக் கொண்டு வருவது பற்றிக் கருத்துத் தெரிவிக்க - அதனை எதிர்த்து தந்தை பெரியார் விடுதலையில் வெளியிட்ட முக்கிய அறிக்கை இது. (குறிப்பு: தந்தை பெரியார் அவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு டாக்டர் கலைஞர் அவர்கள் டாக்டர் நாவலரின் கருத்தைச் செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது). நுழைவுத் தேர்வு என்னும் சமூகநீதிக்கு எதிரான முறையை கலைஞர் அவர்களின் தி.மு.க.ஆட்சி நீக்கியது. அதன் மூலம் கடந்த மூன்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்கள் உயர் கல்வியில் தமக்குரிய இடத்தை பெற்று வருகின்றனர். இதன் மூலம் சமூக நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் நுழைவுத்தேர்வு நடைமுறையில் இல்லாத நிலையில் மத்திய அரசு மீண்டும் இந்திய அளவில் நுழைவுத் தேர்வைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இந்த சமூக நீதிக்கு எதிரான முறையைக் கைவிட வலியுறுத்தி வழக்கம் போல திராவிடர் கழகம் தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி தனது முதல் குரலை எழுப்பியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் நுழைவுத் தேர்வைப் பற்றிய தந்தை பெரியார் அவர்களின் கருத்து என்ன என்பது தெரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். அதன் அடிப்படையில் இது வெளியிடப்படுகிறது)

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா



** நன்றி periyarwritings.org

(http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-03-06-52-27/20388-2012-07-07-02-36-37)

தமிழ்நாடு தமிழருக்கே - Sep-11-1938

தமிழ்நாடு தமிழருக்கே !!!



(SEP-11-1938 அன்று திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தில் பெரியார் உரையாறிய பொழுது 'தமிழ்நாடு தமிழர்க்கே' என்ற முழக்கத்தை வைத்தார். இதை முதன் முதலில் முன்வைத்தவர் தந்தை பெரியாரே. சோமசுந்திர பாரதியார், மறைமலை அடிகள் போன்றோர்கள் தமிழ் நாடு தனி மாநிலமாக வேண்டும் என்று கேட்ட பொழுது பெரியார் தமிழ் நாடு தனியாகப் பிரிய வேண்டும் என்றார்.)

காங்கரஸ் லட்சியம் “சுயராஜ்யம்” என முதன் முதல் கூறியது காலஞ் சென்ற தாதாபாய் நவரோஜி. அது போல “தமிழ்நாடு தமிழருக்கே”என தமிழர்களின் பிரதிநிதிகளான மூன்று பெரியார்கள் சென்ற 11-ந்தேதி சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒன்றரை லக்ஷம் தமிழர்கள் முன்னிலையில் கூறிவிட்டார்கள். அக்கூட்டத்துக்குத் தலைமை வகித்த மறைமலை அடிகள் மதவாதிகள் பிரதிநிதி, அக்கூட்டத்தில் பேசிய தோழர் பாரதியார் காங்கரஸ்காரர் பிரதிநிதி, அன்று பேசிய ஈ.வெ. ராமசாமிப் பெரியார் பகுத்தறிவுவாதிகள் பிரதிநிதி. ஆகவே தமிழ்நாட்டின் அபிப்பிராயம் அக்கூட்டத்திலே பூரணமாகப் பிரதிபலித்தது என தைரியமாகக் கூறிவிடலாம். தமிழ் நாட்டார் மதவாதிகள், பகுத்தறிவுவாதிகள், காங்கரஸ் வாதிகள் என்ற மூன்று பெரும் பிரிவில் அடங்கி விடுவர். அந்த மூன்று பிரிவார் அபிப்பிராயத்தையே அந்த மூன்று பெரியார்களும் தமிழர்களுக்கு அன்று பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் இப்பொழுது தோன்றியிருக்கும் தமிழர் இயக்கம் எந்தக் கட்சிக்கும் உரியதல்ல வென்பதும் ஜாதி மத நிற கட்சி வித்தியாசமின்றி தமிழர்கள் அனைவருக்கும் சொந்தமானது என்பதும் விளங்கிவிட்டது.

இனி “தமிழ்நாடு தமிழருக்கு” என்பதே தமிழர்களின் மூல மந்திரமாக இருக்க வேண்டும்.

“தமிழ்நாடு தமிழருக்கு” என்னும் பொன் மொழியைத் தமிழர்கள் சதா ஞாபகத்தில் வைத்துத் தமிழர் இயக்கத்தை வலுப்படுத்த முயல வேண்டும்.

தமிழ்நாடு தமிழருக்கே” என்ற பொன்மொழியே பெரிய எழுத்தில் அச்சிட்டு ஒவ்வொரு தமிழனும் தன் வீட்டுச் சுவரில் ஒட்டி வைக்க வேண்டும்.

அச்சுக்கூடச் சொந்தக்காரரான தமிழர்கள் எல்லாம் “தமிழ் நாடு தமிழருக்கே” என்ற பொன்மொழியை அழகிய எழுத்தில் அச்சிட்டு தமிழ் மக்களுக்கெல்லாம் இலவசமாக வழங்க வேண்டும்.

தமிழ்நாடு தமிழருக்கே” என்ற பொன்மொழியை தமிழ்நாடு முழுதும் ஒலிக்க வேண்டும்.

உண்ணும் போதும், உறங்கும் போதும், நடக்கும் போதும், வேலை செய்யும்போதும், “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற ஞாபகமே தமிழருக்கு இருக்க வேண்டும்.

தமது மரபுக்கு ஆபத்துண்டாகும் காலத்துத் தமிழர்கள் கட்சி பேதங்களையும், அபிப்பிராய பேதங்களையும் மறந்து ஒன்றுபடத் தவற மாட்டார்கள் என்பது சந்தேகமற விளங்கிவிட்டது. பல பிரிவினராய்ப் பிரிந்து நின்ற தமிழர்கள் ஒன்றுபட ஒரு தருணமளித்த கனம் ராஜகோபாலாச்சாரியாருக்கு தமிழர்கள் எல்லாம் நன்றி செலுத்த வேண்டியதுதான். பன்னூற்றாண்டு காலம் ஆரியருக்கு அடிமைப்பட்டுக் கிடந்த தமிழர்கள் ஆங்கிலக் கல்வியால் அறிவு விளக்கம் பெற்று ஆரியப் பீடையிலிருந்து ஒருவாறு விடுபட்டு வருகையில் தேசீயத்தின் பெயரால் மீண்டும் தமிழர்களை ஆரியர்களுக்கு அடிமைப்படுத்தச் சூழ்ச்சி வேலைகள் நடைபெறுகின்றன. அச் சூழ்ச்சி வெற்றிபெறத் தமிழர்கள் சம்மதிக்கவே கூடாது. ஆரிய நாகரிகத்தை எதிர்த்துப் போராடிய சித்தர் இயக்கத்தை சூழ்ச்சிக்காரப் பார்ப்பனர்கள் தமது பார்ப்பன மதம் மூலம் அடக்கி விட்டனர். அப்பால் ஆரிய நாகரிகத்தை ஒழிக்கப்போராடி வெற்றி பெற்றுவரும் சுயமரியாதை இயக்கத்தை தேசீயத்தின் பேரால் ஒழிக்க காங்கரஸ் பார்ப்பனர் முயல்கின்றனர். இச்சூழ்ச்சியை உணராது காங்கரஸ் தமிழர்களும் பார்ப்பனர்களுக்கு உடந்தையாக இருந்து கொண்டு உதவிபுரிந்து வருகிறார்கள். காங்கரஸ்வாதியான பாரதியாரைப் பார்த்தாவது அவர்கள் நல்லறிவு பெறுவார்களாக.

தோழர் ஈ.வெ.ரா. 11ந்தேதி சென்னைக் கூட்டத்தில் கூறியது போல் தமிழ் நாட்டைத் தனியாகப் பிரிக்கத் தமிழர்கள் கிளர்ச்சி செய்ய வேண்டும். இந்தி எதிர்ப்பு இயக்கம் தமிழ் மாகாணப் பிரிவினை இயக்கத்துக்கு முதல்படியே. தமிழ்நாடு தனியாகப் பிரிக்கப்பட்டால் தமிழர் மொழியும் இலக்கண இலக்கியங்களும் கலைகளும் நாகரிகமும் விருத்தியடையும். தமிழ்மொழி வளரும் தன்மையுடைய சீரியமொழி – ஜீவமொழி. எல்லாக் கலைகளையும் எல்லா அறிவுகளையும் தன்னுள் அடக்கிக்கொள்ள தமிழுக்கு சக்தியுண்டு. தமிழர் கலைகளையும் மத அறிவையும் வடமொழியில் சேர்த்தே ஆரியப் பார்ப்பனர் வடமொழியை வளப்படுத்திக் கொண்டனர். இதனை ஒரு பார்ப்பனரான காலஞ்சென்ற பண்டித வி.கெ. சூரிய நாராயண சாஸ்திரியாரே ஒப்புக்கொண்டிருக்கிறார். தமிழர்களுக்கு இப்பொழுது முக்கியமாக வேண்டப்படுவது மேனாட்டு விஞ்ஞான அறிவு. மேனாட்டு விஞ்ஞான நூல்களை – தமிழில் – நல்ல சுத்தத் தமிழில் மொழிபெயர்த்தாக வேண்டும். மொழிபெயர்க்குங்கால் சொற் பஞ்சம் ஏற்படுமோ என அஞ்சத் தேவையில்லை. இன்றியமையாத இடங்களில் ஆங்கிலப் பதங்களையும் தாராளமாக வழங்கலாம். பிலாஸபி, லாஜிக், பிசிக்ஸ், கெமிஸ்டிரி முதலிய ஆங்கில அறிவு நூல்களில் வழங்கப்படும் சொற்கள் எல்லாம் ஆங்கில பதங்கள் அல்ல. கிரிக், லத்தீன், பிரஞ்சு, ஜெர்மன், ஸமஸ்கிருதம் முதலிய பதங்களை ஆங்கிலப் பேராசிரியர்கள் தாராளமாகக் கையாண்டிருக்கின்றனர். அம்முறை எம்மொழிக்கும் இழுக்காகாது. தமிழ் மொழியைப் பல வழிகளிலும் வளப்படுத்துவதே நமது முழு நோக்கமாக இருக்க வேண்டும். தமிழ் மொழி அவ்வுயரிய நிலையை அடைய வேண்டுமானால் அது ராஜாங்க பாஷையாகித் தீரவேண்டும். தமிழ் மாகாணம் தனியாகப் பிரிக்கப்பட்டால்தான் தமிழ் ராஜாங்க பாஷையாக முடியும். ஆகவே தமிழ் மாகாணப் பிரிவினை விஷயத்தில் தமிழர்கள் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

காங்கரஸ் கொள்கைப்படி பாஷா வாரியாக மாகாணங்கள் பிரிக்கப்பட்டால் எல்லா மாகாணங்களுக்கும் பொதுவான ஒரு பொதுமொழி வேண்டியது அவசியமே. அதற்கு ஏற்றமொழி இப்பொழுது இந்தியப் பொதுமொழியாக இருக்கும் ஆங்கிலமே. ஆங்கிலம் இந்தியப் பொதுமொழியாக மட்டுமன்றி உலகப் பொதுமொழியாகவும் இருக்கிறது. மக்களுக்கு சுதந்தர உணர்ச்சியையும், நல்லறிவையும் புகட்டக் கூடியது ஆங்கிலமே. மறைமலையடிகள் 11-ந்தேதிக் கூட்டத்தில் கூறியதுபோல இந்தியர்களை மனிதராக்கியது ஆங்கிலமே. இந்தியர்களுக்கு சுதந்தர உணர்ச்சியைக் கொடுத்ததும் ஆங்கிலமே. இந்தியர்களைப் பகுத்தறிவாளராக்கியதும் ஆங்கிலமே. இந்தியமொழிகளுக்குப் புத்துயிரளித்ததும் ஆங்கிலமே. இந்திய மொழிகள் புதுமுறையில் உருப்பெற்று வருவதற்குப் பெரிதும் உதவி புரிந்தது ஆங்கிலமே. நேருணர்ச்சியுடைய மொழிவல்லாரெல்லாம் இதனை ஒப்புக்கொள்வர். ஆங்கிலம் இந்தியர்களுக்கு அடிமை மனப்பான்மையை உண்டுபண்ணி விட்டதென காங்கரஸ்காரர் கூறுவது மிகவும் நன்றிகெட்ட பேச்சாகும். இந்தியால் இந்தியாவில் ஒற்றுமை ஏற்படுமெனக் கூறுவது குறும்புத்தனம் – போக்கிரித்தனமானதாகும். இந்தியின் யோக்கியதைகளை விளக்கிப் பலர் “விடுதலை”யில் எழுதியிருப்பதினால் நாமும் மீண்டும் எழுத விரும்பவில்லை. ஆங்கிலத்தினால் நாம் பெற்ற நலங்களையெல்லாம் ஒழித்து தமிழரை வட நாட்டாருக்கும் ஆரிய நாகரிகத்துக்கும் அடிமைப் படுத்தவே காங்கரஸ் பார்ப்பனர்கள் முயல்கின்றார்கள். ஆகவே தமிழ் மாகாணத்தை தனியாகப் பிரித்து தமிழை ராஜாங்க பாஷையாக்குவதையும் ஆங்கிலத்தை இந்தியப் பொதுமொழியாக்குவதையும் லட்சியமாகக் கொண்டு தமிழர் இயக்கம் உழைக்க வேண்டுமென்பது நமது பேரவா.

– 19.09.1938 “விடுதலை” தலையங்கம்

குடி அரசு – கட்டுரை – 25.09.1938