Sunday, 17 September 2017

தந்தை பெரியார் 85-வது பிறந்தநாள் செய்தி

தந்தை பெரியார் 85-வது பிறந்தநாள் செய்தி


சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளைாக எனது பிறந்தநாள் பாராட்டுக் கூட்டம் (விழா) என்பதில் நான் பாரட்டுதலுக்கு நன்றி செலுத்தும் போது அடுத்த ஆண்டு வேலைத்திட்டம் என்பதாக ஏதாவது ஒரு திட்டத்தை வெளியிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அப்படி வெளியிடுவதில் நான் பெரிதும் சமுதாய சம்பந்தமான குறைபாடுகளை, மத சம்பந்தமான மூட காட்டுமிராண்டித்தனமான கருத்து, செய்கை ஆகியவைகளைப் போக்குவதற்கு ஏற்றதான திட்டங்களையே வேலைத் திட்டமாகச் சொல்லி (வெளியிட்டு) வந்திருக்கிறேன். அப்படிச் சொல்லிவருவதில் சொல்லுவதற்கேற்ப ஒரு அளவுக்கு அது நிறைறுேம் வண்ணம் கிளர்சசியோ முயற்சியோ கழகத்தின் மூலம் செய்தும் வந்திருக்கிறேன். ஆனால் அவை எல்லாம் நிறைவேற்றம் அடைந்தது என்று சொல்லுவதற்கு இல்லாவிட்டாலும் ஏதோ சிறு அளவுக்காவது வெற்றியும் வெற்றி முகமும் ஏற்பட்டு வருவ துடன் மக்களிடையில் அத்திட்டத்தின் அவசியம் பற்றிய உணர்ச்சி வளர்ச்சி அடைந்து வந்திருப்பதை நான் உண்மையாகவே உணருகிறேன்.

மறுக்க முடியாத புரட்சித்திட்டங்கள்

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அத்திட்டங்கள் எவ்வளவு புரட்சிகரமானதாக இருந்தாலும் அவற்றில் எதையும் வாயளவில் கூட மறுக்கும்படியான எதிர்ப்புக் காரியங்களை இதுவரை நான் எந்த கூட்டத்தாராலும் எந்தத்துறையிலாவதும் காணவே இல்லை.
பொதுவாக பார்ப்பனர்களுடையவும் மத உணர்ச்சியாயருடையவும் வெறுப்பைப் பெற்று வந்திருக்கிறேன் என்பதை நான் மறுக்கவில்லை. இந்த வெறுப்புத்தன்மை எனது திட்டங்களுக்கு பாமர மக்களாலும்கூட ஏற்படுவது என்பது அதிசயமாகாது. ஏனெனில் நம் மக்கள் 100க்கு 90 பேர் எழுத்து வாசனை அற்றவர்கள். படித்த மக்களில் 100க்கு 99 பேர் மூட நம்பிக்கையில் மூழ்கிப் பேராசை கொண்டவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நமது திட்டங்கள் அவர்களுடைய சுயநலத்திற்குக் கேடு ஏற்பட்டதாகவே கருதி நம்மீது வெறுப்புக்கொண்டு தான் வந்திருக்கிறார்கள்.


வெறுப்பிலும் - எதிர்ப்பிலும் முன்னேற்றம்


இந்த வெறுப்புக்களை நான் குழந்தைகள் மருந்து சாப்பிட, தங்கள் எதிர்ப்பைக் காட்டுவது போன்றது என்று கருதி “எதிர்ப்பை” வெறுப்பை இலட்சியம் செய்யாமல் தொண்டாற்றி வந்திருக்கிறேன்.
அத்தொண்டுகள் அடியோடு வீணாகிவிட்டன என்று சொல்லமுடியாமல் நாடும், கொடுமைக்கும் மடமைக்கும் ஆளான சமுதாயமும், நல்ல அளவுக்கு முன்னேறியே வருகிறதைப் பார்க்கின்றேன்.
இதற்கு எடுத்துக்காட்டு என்னவென்றால் நாடு, சமுதாயம், முன்னேற்றத்தினால், இன்று எந்த சமுதயாத்திற்கு “கேடு”நெருங்கி வருகிறதோ அந்த சமுதாயம் தங்களது கடைசி ஆயுதத்தை இன்று பயன்படுத்த முன் வந்து இருப்பதே போதுமானதாகும்.

கடவுள், மதம், சாதி செத்த பிணமே


சாதாரணமாகச் சொல்லுவதானாலும் கடவுள், மதம், ஜாதி என்கின்றதான மாயப்பேய்கள் இன்று செத்து பிணங்களாகிவிட்டன என்றே சொல்லலாம். இவற்றில் ஈடுபட்டவர்கள், இவற்றால் பயனடைந்தவர்கள் இப்பிணங்களுக்கு சமாதி கட்டும் வேலையில் தான் இன்று ஈடுபட்டிருக்கிறார்களே ஒழிய, கொஞ்சமாவது உயிர் இருக்கிறது என்று கருதி, யாரும் பிழைக்க வைக்க முயற்சிக்கவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது, என்றாலும் கூட இந்த சுயநலமெளடிக கும்பல்கள் மக்களளை, சமாதியைக் காட்டி ஏமாற்றிப் பிழைப்பதிற்கில்லாமல், மேலும் சில வேலை செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை நான் மறைக்கவில்லை. மேலும் பணி உளது ஆனால் தொல்லை மிகுதி



ஏனென்றால் மக்களின் மடைட அவ்வளவு முதிர்ந்ததாக இருக்கிபடியாலும் எதிரிகள் கடைசி முயற்சி செய்கிறபடியாலும் நமக்கு இப்போது வேலை இல்லை என்று சொல்லுவதற்கு இல்லை. மற்றும் நமக்கு இன்று மற்றொரு புதிய தொல்லை ஏற்பட்டிருக்கிறது. அது என்ன தொல்லை என்றால் அதுவரை நாம் பார்ப்பனர் தொல்லைக்குப் பரிகாரம் தேடும் பணியில் முனைந்து இருந்தோம். இப்போது நாம் பார்ப்பனர் மாத்திரமல்லாமல் முஸ்லீம்களுடையவும் கிருஸ்தவர்களுடையவும் தொல்லையைச் சமாளிக்க பரிகாரம் தேட வேண்டியவர்களாக இருக்கிறோம். இத்தொல்லையை சுலபமான தொல்லை என்று கருதிவிட முடியாது. கஷ்டமான தொல்லை என்று தான் சொல்ல வேண்டும்.


நான் 85வது ஆண்டுக்கு வேலைத்திட்டமாக நமது சமுதாயம், நமது பார்ப்பனர் அல்லாத சமுதாயமாகிய “4ம் சாதி” “சூத்திரர்’ என்று பார்ப்பனரால் ஆக்கப்பட்டு அதற்கு ஏற்ப இழிமக்களாகவும் கல்வி அறிவுற்ற காட்டுமிராண்டி மக்களாளகவும் இருக்கச் செய்யப்பட்ட நாம், கல்வி, நல்வாழ்வு, ஆட்சி உரிமை முதலாகியவற்றில் நம் சமுதாயம் (எண்ணிக்கைக்க ஏற்ப) விகிதாசாரம் அடைய வேண்டும் என்கின்ற சில இலட்சியத்தைப் பெறும்படியான பணியை வேலைத் திட்டமாகக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.




வகுப்பு விகிதாசார உரிமைநேமது இலட்சியம்

இதை மிகக்கடினமான வேலைத்திட்டம் என்றுதான் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த நாட்டில் பார்ப்பன சமுதாயத்தின் உயிர்-ஜீவநாடியே இது தான். அதாவது நம்மை மேற்கண்ட இழிவான அடிமை நிலையில் வைத்து இருப்பது தான். எப்படி என்றால் , ஆட்சியில் நமக்கும் அவர்களுக்கும் சமுதாய எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதாசாரம் ஏற்பட்டுவிட்டது என்றால் அந்த நிமிடமே “பார்ப்பான் (பிராமணன்) செத்தான்’ என்று ஆகிவிடும். அதுமாத்திரம் அல்லாமல் சூத்திரன், இழிமகன், மூடக்காட்டுமிராண்டி மகன் என்பவனும் ஒழிந்தான். சரிநிகர் மனித சமுதாயந்தான் நம் நாட்டில் இருக்கிறது என்பதாக ஆகிவிடும். ஆதலால் நம் இலட்சியம் நிறைவேற பார்ப்பான் தன்னுடைய எல்லாவற்றையுமே செலவழித்துப் பார்ப்பான். ஆனதினாலே இந்த நமது இலட்சியம் மிகக் கஷ்டமானது என்று கருதினேன்.

உதாரணமாக, நம்மில் கீழ்த்தரமான மக்களையெல்லாம் பார்ப்பான் இன்று தன்னோடு இணைத்துக் கொண்டு, அவர்களையும் நம் சமுதாய நலத்துக்கு எதிரிகளாக ஆக்கி தொல்லைகொடுத்துக் கொண்டு இருந்த பார்ப்பனர் இன்றைய நிலைக்கு தனக்கு அந்த பலம் போதாது என்று கண்டுகொண்டவுடன் புதிய பலத்தை உண்டாக்கிக் கொள்ள முயற்சித்து அதில் வெற்றி பெற்றுவிட்டனர்.
ஆந்த புதிய பலம் என்னவென்றால் , நம் நாட்டில் பார்ப்பனர்களைப் போலவே உள்ள மற்றும் சிறு சிறு (மைனாரிட்டி) வகுப்புகளான முஸ்லீம்களையும் கிறிஸ்துவர்களையும் தன்னோடு சேர்த்துக்கொண்டனர்.




நமது சமுதாயத்தின் நான்கு எதிரிகள்


ஆதலால் நாம் இன்று பார்ப்பனர்; 2.நம்மில் கீழ்தர மக்கள் ; 3.முஸ்லீம்கள் , 4கிறிஸ்துவர்கள் ஆக இன்று நமக்கு சமுதாய எதிரிகளாக இருந்த நான்கு கூட்டங்கள் (குழக்கள்) இருக்கின்றன. இந்நால்வரும் ஏற்கனவே நம் சமுதயாத்தைப் பற்றிக் கவலை இல்லதாதவர்கள். மற்றும் இந்நான்கில் மூவர், தம்தம் சமுதயாத்துறையில் நம்மைவிட மேலான நிலைமையில் அரசியல், பொருளாதார இயல், கல்லி இயல், பதவி இயல், மத இயல் முதலியவற்றில் சராசரித் தன்மைக்கு மிகமிக மேலான நிலைமையில் இருப்பவர்கள், வாழ்பவர்கள என்று சொல்லத்தக்கவராவார்கள்.ஒரு கூட்டத்தினர் நம்முடைய இழிநிலை பற்றியும் - ஏன்-தங்களுடைய இழிநிலை பற்றியும் கூட கவலை இல்லாமல் “சோறு-சீலை-காசு” ஆகிய மூன்றையுே வாழக்கை இலட்சியமாகக் கொண்டவர்கள் ஆவார்கள். ஆதலால் ஒருசிறு நலத்திற்கும் தங்களுடைய எதையும் தியாகம் பண்ணவும் துணிவு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

ஆகையால் நமது இலட்சியம் நிறைவேறுவதற்கு இவர்கள் இந்நான்கு குழுவினர்களும் பெரும் கேடர்களாக இருக்கும் நிலைமை நமக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலை நம் வளர்ச்சியையும் நம் இன்றைய நல்வாழ்வையும் சிதைத்துவிடும் என்றே கருத வேண்டியிருக்கிறது.


காமராசர் ஆடசியில் என்றுங்காணா முன்னேற்றம்

இந்நிலை இன்று ஏற்படக் காரணம் இதுவரை இல்லாத அளவுக்கு காமராசர் ஆட்சி காரணமாக தமிழ் மக்களாகிய நாம் பெரும் அளவுக்கு முன்னுேறி வருகிறோம். இதைச் சிதைக்க வேண்டிய அவசியம் பார்ப்பனர்ருக்கு ஏற்பட்டுவிட்டது. அவர்கள் (பார்ப்பனர்கள்) தனித்துநின்று நம்மை எதிர்த்து அழிக்கமுடியாது, ஆதலால் துணைதேட முயன்றார்கள். அம்முயற்சியில் ஏனைய முக்குழுவினர் அவர்களுக்கு கிடைத்துவிட்டார்கள். ஏனெனில் இவர்களுக்கு எவ்வித கொள்கையும் கிடையாது. யாரை அண்டியாவது எப்படி நடந்தாவது தங்கள் நலன் ஒன்றே இலட்சியமாகும் , நாம் வகுப்புவாரி உரிமை கேட்கும் போது அந்தப்படி நாம் அடைந்துவிட்டால் இவர்கள் நலம் கெடும் என்கின்ற குறை அச்சம் ஏற்பட்டுவிட்டது. ஆதலால் இவர்கள் எளிதில் பார்ப்பனர் வலையில் பட்டுவிட்டனர்!

பார்ப்பனர் -முஸ்லீம் பரஸ்பர உதவி மற்றும் ஆச்சாரியார், முஸ்லீம்களை மயக்கி காஃ/மீரை முஸ்லீம்களுக்கு (பாகிஸ்தானுக்கு) பொடுத்து விட வேண்டியது நியாயாம் என்று சொல்லிவிட்டார். இதற்கு முஸ்லீம்கள் நன்றி காட்டும் முகத்தான் இராஜிாஜிக்கு இந்திய பிரதமர் பதவி கொடுக்க வேண்டும் அவர்தான் அதற்கு தகுதி உடையவர் என்று பாகிஸ்தான் தலைவர் அய+ப்கான் சொல்லி, இந்நாட்டு முஸ்லீம்களை ஆச்சாரியாரை ஆதரிக்கச் செய்துவிட்டார்.
மற்றும் நமது பகுத்திறவுக் கிளர்ச்சியும் நேருவின் சோஸியலிசக் கொள்கையும், இஸ்லாம் கிருஸ்துவ சமுதாயத்திற்கு அவர்கள் மதத்திற்கு கேடு வரும் என்ற புரளியை பார்ப்பனர் கிளப்பிவிட்டு விட்டார்கள். இதனாலேயே முஸ்லீம் கிருஸ்துவ சமூகத் தலைவர்களான திரு.இஸ்மாயில் அவர்களும் திருரத்தினசாமி அவர்களும் இவ்விரு சமுதாயமும் இராஜாஜியை ஆதரிக்க வேண்டும் என்று கட்டளை இட்டு விட்டார்கள்.
ஆகவே இனிவரும் தேர்தல்களில் இம்மூன்று குழுவினரும் தங்களுக்கு வெற்றி கிடைக்க வகை இல்லை என்று தெரிந்தாலும், நம்மில் இருந்து கொண்டே தங்கள் சுயநலத்துக்கு, நம் இனத்துக்குக் கேடு செய்து வாழ்வது, என்ற முடிவில் ஆச்சாரியாரை அண்டி இருக்கும் கண்ணிர்த்துளிகளைத் தான் ஆதரிக்க வேண்டும் , எப்படியாவது காமராஜரை தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்ற சதித்திட்டம் ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றனர்.

இதன் பயன் என்ன அகும் என்றால் இனி தேர்தல்களில் இரண்டு கட்சி போட்டி! அப்போட்டியில் காமராசர் (காங்கிரஸ்) கட்சி, தமிழர்களின் ஒட்டுக்களை அதிகமாய் (மெஜாரிட்டியாய்) பெற்றாலும் இந்தப் பாப்பனர், முஸ்லீம், கிருஸ்துவர்கள் ஆகிய முக்குழுவும் எந்த கட்சிக்கு ஒட்டு செய்வார்களோ, அந்தக் கட்சி தான் ஜெயிக்க முடியும். திருவண்ணாமலை தேர்தல் முடிவு அப்படித்தான் ஏற்பட்டது. நம் தமிழ் மக்களின் ஒட்டு நமக்கு அதிகமாய் கிடைத்து இருந்தும் இந்தக் குழுவினர் ஒட்டுக்களாலேயே காமராசர் (தமிர்கட்சி) தோல்வி அடைய வேண்டியதாயிற்று. அவர்கள் 3 பேர்கள் நமக்கு எதிரிகளாகி, நம் எதிர்கட்சிக்கு ஒட்டு செய்தால் அது நமக்கு பெருங்கேடாகவே முடியும்.


ஆச்சாரியார் தந்திரம்


இதற்கு ஆகத்தான் இராஜாஜி “ காங்கிரஸ் மெஜாரிட்டி சமுதாயக் கட்சி ஆனதால் அதனால் மைனாரிட்டி சமுதயாத்திற்கு கேடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள மைனாரிட்டி சமுதாயம் ஒன்றாக சேர்ந்து கட்டுப்பாடாக இருக்க வேண்டும்” என்று கூறி கூட்டுச் சேர்ந்த்துக் கொண்டு துணிந்து எதிர்க்கிறார்.


விகிதாசாரம் ஒதக்குவதே பரிகாரம்


இதற்குப் பரிகாரம் தேடவில்லையானால், நாம் என்னதான் பிரசாரம் செய்தாலும் கட்சியை பலப்படுத்தினாலும் , வெற்றி கிடைப்பது முடியாத காரியமாக ஆனாலும் ஆகிவிடலாம் ஆனதால் மைனாரிட்டிக் முழுவோடடினால் மெஜாரிட்டி கெடாமல் இருக்க அவர்களை தோதலில் ஒதுக்கிவிடுவதே தக்க மார்க்கமாகும். குறைந்தது அவ்விரு சமுதாயத்திறகுமாவது தனித்தொகுதி கொடுத்து ஒதுக்கி விட்டுவிட்டால் பெரும் அளவிற்குத் தொல்லை ஒழியும் என்பது எனது கருத்து. அதோடு கூடவே வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்னும் பேரால் தமிழர்,பார்ப்பனர், முஸ்லீம், கிறிஸ்துவர் என்கின்ற தலைப்பில் அவரவர் சமுதாய எண்ணிக்கைப்படி அரசாங்கத்திற்குள்ள எல்லாத் துறையிலும் இவ்வாறு பிரித்துவிட்டால், தமிழ்நாட்டை, தமிழ் மக்களைப் பிடித்த எல்லா கேடுகளும் ஒழிந்தே போகும்.

வகுப்புரிமைக் கிளாச்சித் திட்டம்

ஆகவே இதைத்தான் எனது 85-வது அண்டுத் திட்டமாக நான் கொண்டிருக்கிறேன்.
இவற்றிலும் முதலாவது நம்நாட்டு ஆட்சியில் நாம் அடையவேண்டிய வகுப்புரிமைக்கு கிளாச்சி செய்வதை
உடனடித்திட்டமாய் கொண்டிருக்கிறேன்.

நம் இயக்கத் தோழர்கள் ஆயத்தமாய் இருக்க வேணடிக் கொள்ளுகிறேன்.

ஈவெராமசாமி





No comments:

Post a Comment