தந்தை பெரியார் 87-வது பிறந்தநாள் செய்தி
எனது விண்ணப்பம்
சுயமரியாதை இயக்கத் தோற்றம்
நான் 1925-ம் அண்டில் காங்கிரசில் இருந்து விலகிய பின் அரசியல் என்பது நமது நாட்டைப் பொறுத்தவரையில் பார்ப்பன ஆதிக்கத்திற்குப் பார்ப்பனாரால் நடத்தப்படும் போராட்டமேயொழிய, பொதுஜன நன்மைக்கேற்ற ஆட்சி முறை வகுப்பதற்கோ அல்லது வேறு எந்த விதமான பொது நல நன்மைக்கேற்ற லட்சியத்தைக் கொண்டதோ அல்ல என்பதை தெளிவாக உணர்ந்து அப்படிப்பட்ட பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதையும், எந்தக் காரணம் கொண்டும் நமது நாட்டில் இனியும் பார்ப்பன ஆதிக்கம் ஏற்பட இடம் கொடுக்கக்கூடாது என்பதையும் கருதி, பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஊற்றாக இருந்து வரும் கடவுள், மத, ஜாதித் தத்துவங்களையும், இந்தத் தத்தவத்திற்கு இடமாக விருக்கிற மூட நம்பிக்கையும், மூட நம்பிக்கையை அரசியல், கடவுள், மதம், சாத்திரம், தர்மம் ஆகியவற்றின் பேரால் வளர்க்கும் பாார்ப்பன சமுதாயத்தையும் ஒழிப்பது என்ற கொள்ளை மீது “சுயமரியாதை இயக்கம்” என்பதாக ஒரு இயக்கத்தைத் தோற்றுவித்து, நானே தோற்றுவித்தவனாகவும், தொண்டாற்றுபவனாகவுமிருந்து பல தோழர்களின் ஆதரவு பெற்று அதை நடத்தி வந்தேன். இந்த நிலையில் காங்கிரசானது அரசியல் ஆதிக்கத்தில் பிரவேசிப்பதில்லை யென்றும், சமுதாயத் தொண்டே தான் காங்கிரசின் பிரதான கொள்கை சொல்லி நிர்மாணத் திட்டம் என்னும் பேரால் பொய் நடிப்பு நடித்து மக்களை ஏமாற்றி வந்த (காங்கிரஸ்) தனது வேடத்தை மாற்றிக் கொண்டு அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்றத் துணிந்து வெளிப்படையாகவே அரசியலில் புகுந்து ஆட்சியை கைப்பற்ற முன்வந்து விட்டதையும் உணர்ந்தேன்.
அரசியலில் பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு
பிறகு எனது நிலை மேலே குறிப்பிட்டபடி கடவுள், மதம், ஜாதி, தர்ம, சாத்திர, சம்பிரதாய, பார்ப்பன சமுதாய ஒழிப்பு வேலைகளுடன், அரசியலில் பார்ப்பனர் நுழையாதபடியும், ஆதிக்கம் பெறாமல் இருக்கும்படியும் தொண்டாற்ற வேண்டிய அவசியத்திற்கு ஆளாக நேரிட்டுவிட்டது. அதாவது இவ்வளவு துறையிலும் பாடுபட வேண்டியதே எனக்கு சமுதாயத் தொண்டனாக ஆகிவிட்டது. இதன் பயனாய் எனது வேலை இரட்டித்துவிட்டதுடன் எதிர்நீச்சல் ேெபால மிக மிகக் கஃடமான காரியமுமாகிவிட்டது. எப்படி எனில் நான் கடவுள், மத, சாஸ்திர, சம்பிரதாய, ஜாதித் துறையில் பாடுபட்டால் எதிரிகள் (பார்ப்பனர்) அரசியல் துறையில் முன்னேறி விடுகிறார்கள். அரசியல் துறையில் ஈடுபட்டால் எதிரிகள் (பார்ப்பனர்) கடவுள், மத, சாஸ்திர, சம்பிரதாய, ஜாதித் துறையில் முன்னேறி விடுகிறார்கள். ஆதலால் இரு துறைகளில் மூடநம்பிக்கையுள்ள பாமரமக்கள் இடையில் வேலை செய்வதென்பது எனக்கு மேற்சொன்னபடி மிக மிகக் கஷ்டமாகவும் காட்டு வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடும் வேலை போலும் திணற வேண்டியதாகிவிட்டது,
துரோகிகளால் தொல்லை
இதற்கிடையில் எனக்கேற்பட்ட மற்றொரு மாபெரும் தொல்லையென்னவென்றால் என் தொண்டுக்கு ஆதரவாக சேர்ந்து எடத்து அணைத்து பக்குவப்படுத்தி வந்த தோழர்கள் எல்லாம் 100க்கு 100 பேரும் பக்குவமடைந்தவுடன், விளம்பரம் பெற்று பொது மக்கள் மதிப்புக்கு ஆளானவுடன் அத்தனை பேரும் எதிரிக்கு கையாள்களாகவே (எதிரிகளால் சுவாதீனம் செய்யப்பட்டு) எதிரிகளுக்கு பலவழிகளிலும் பயன்படுவர்களாகிவிட்டதோடு எனக்கும், எனது தொண்டிற்கும் எதிரிகளாக, முட்டுக்கட்டைகளாக பலர் விளங்க வேண்டியவர்களாகிவிட்டர்கள். இதற்குக் காரணம் (பிரஹலாதன், விபீஃணன் போல்) நமது ஜாதிப் பிறவித்தன்மை தான் என்று சொல்லவேண்டியதைத் தவிர எனது 40 வருட பொதுத் தொண்டின் அனுபவத்தில் வேறொன்றும் சொல்ல முடியவில்லை.
இந்த நிலையில் 40 ஆண்டுகளாகத் தொண்டாற்றி வந்து இன்றுள்ள நிலையில் எனது தொண்டின் பயனும், நிலையும் இருக்கிதென்றால் என்னைப்பற்றி அறிஞர்கள் தான் விலை மதிக்க வேண்டும்.
எதிர்ப் பிரசாரங்கள்
என்னை விட்டு விலகி எதிரிகளானவர்கள் எதிரிகளின் கையாள்களானவர்கள் ஒழுக்கத்தில் என் மீது குற்றமிருந்து, என் நடத்தையில் கோளாறு இருந்து விலகி இருப்பார்களேயானால் அதற்காக நான் வெட்கப்பட வேண்டியது தான் நியாயமாகும். ஆனால் விலகியவர்கள் அத்தனை பேரும் எதிரிகளோடு சேர்ந்தார்கள் என்பது மாத்திரமல்லாமல் எந்தக் கொள்கைக்காக என்னுடன் இருப்பதாக நடித்தார்களோ அதை அடியோடு விட்டுவிட்டு நேர் எதிரிடையான கொள்கையை மேற்கொண்டும், அதற்கு ஆக்களமளித்தும் முட்டுக்கட்டை போட்டு வருவதும் தான் நமது சமுதாயத்திற்கென்றே ஏற்பட்ட கெட்ட வாய்பப்பாகும் என்று மறுபடியும் சொல்ல வேண்டி இருக்கிறது.
விபீஷணர்களால் பார்ப்பனர் திருப்தி
இந்தியாவிற்கு சமீபத்தில் வந்து போன ஒரு ரஷ்ய பிரமுகரை ஒரு பார்ப்பனர் “இந்தியாவிற்கு யார் வந்தாலும் சங்கராச் சாரியாரைப் பார்த்துவிட்டுப் போவது தான் முக்கிய காரணம்” என்று சொல்லி சங்கராச்சாரியாரிடம் அழைத்துப் போனாராம் ! அந்த ரஷ்யா’ சங்கராச்சாரியாரிடம் பல விஷயங்களைப் பேசிவிட்டு கடைசியாக “உங்கள் நாட்டில் உங்கள் மத சம்பிரதாயத்திற்கும், உங்கள் சமுதாயத்திற்கும் விரோதமாக பெரியார் ஒரு இயக்கம் நடத்துகிறாரே அவை பற்றி உங்கள் கருத்து என்ன ? ” என்று கேட்டாராம். அதற்கு சங்கராச்சாரியார் “ ஆமாம் அப்படி ஒரு இயக்கம் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது என்றாலும் அது இன்றைக்கு பதினேழு வருடங்களுக்கு முன் வரையில் நாங்கள் மிகக் கவலை கொள்ள வேண்டிய அளவுக்கு நடந்தது. ஆனால் இந்த பதினேழு வருடமாக (1948ல் இருந்து) எங்களுக்கு அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. அதன் பாட்டுக்கு அது நடைபெறுகிறது என்றாலும் இன்று அதனால் எங்களுக்கு எந்த விதத் தொந்தரவும் இல்லை” என்று சொன்னாராம்.
“இப்படி அவர் சொல்லக் காரணம் என்ன?’ என்று அந்த ரஷ்யர் என்னிடம் வந்து கேட்டார் ஆவர் இப்படி என்னைக் கேட்கும் போது ஒரு பார்ப்பனரும் கூட இருந்தார். அதற்கு நான் சொன்ன பதில் “ அது ஒரு நல்ல அளவுக்கு உண்மை தான். எப்படியென்றால் “சுதந்தரம்” வந்த 17 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அது பார்ப்னருக்கு வந்த சுதந்தரமேயாகும் என்பதோடு அதன் பயனாய் நம்மிலிருந்து விளம்பரம் பெற்ற, மக்களிடம் செல்வாக்குப் பெற்ற ஒரு கூட்டம், பார்ப்பனருக்கு (நல்ல நிபந்தனையற்ற) அடிமைகளாகக் கிடைத்துவிட்டது. இந்த இரண்டின் ஆதரவில் பார்ப்பனர் தாங்கள் இழந்ததையெல்லாம் பெற்றுக் கொண்டதோடு மேலேறவும் அவர்களுக்கு நல்ல வசதி ஏற்பட்டுவிட்டது.
பார்ப்பன ஆட்சி மீண்டுவிட்டதே
இது மத்திரமல்லாமல் நானும் இப்படிப்பட்ட பாப்ப்பன சுதந்தரத்தை எதிர்க்கும் வேலையை விட்டு விட்டு இராஜாஜியை ஆட்சியை விட்டு வெளியேற்றி விட்டோம் என்ற ஆணவத்தாலும், காமராஜரிடத்தில் வைத்த அளவுக்கு மீறிய நம்பிக்கையாலும் ‘சுதந்தரத்தை'
இ காங்கிரசை, அரசாங்கத்தை ஆதரிக்கும் பணியில் தீவிரமாக பாடுபட்டு வந்தாலும், காமராஜர் ஆட்சியை விட்டுப் போய்விட்டதாலும், அதற்குப் பிறகு "அசல் பார்ப்பனிய” ஆட்சியே தங்கு தடையின்றி நடந்து வருவதாலும், இதனால் பயனாய் சமுதாயத்துறையிலும், மதத்துறையிலும், உத்தியோகத் துறையிலும், கல்வித்துறையிலும் யாதொரு குறைவுமில்லாமல் மேலே போகும்படியான நிலையில் அவர்கள் (பர்ப்பனர்) நிலை இருப்பதாலும் சங்கராச்சாரியார் அவ்விதம் கூறி இருக்கிறார். மற்றும் இன்னறைய ஆட்சியின் பயனாய் நம் சமுதாயத்திற்கு எவ்வளவு கேடும் இழிவும் ஏற்பட்டாலும் அதை மனதார வெளியில் சொல்லி அழுது திருப்தி அடையக்கூட வாய்ப்பில்லாத நிலையில் நான் காங்கிரசை ஆதரித்துத் தீரவேண்டியவனாய் இருக்கிறேன். இது "பார்ப்பனர்களுக்கு இலாபகரமான விஷயமாகிவிட்டது’ என்று பதில் சொன்னேன். இரஷ்யப் பிரமுகர் இது கேட்டுப் புன்சிரிப்புடன் பரிதாபப்பட்டார்.
மதப்பாதுகாப்பு ஆட்சியே
நிற்க, இன்றைய “சுதந்தர” ஆட்சி ஒரு மதப் பாதுகாப்பு ஆட்சியாகவே ஆட்சி நடத்துகிறது. இதை பயனளிக்கும்படியான அளவுக்கு கிளர்ச்சி செய்யவோ, கனடிக்கவோ தக்கபடி எதிர்ப் பிரசாரம் செய்யவோ கூட தொண்டாற்ற முடியவில்லை. பத்திரிகைகள் யாவும் கூண்டோடு பார்ப்பன ஆதிக்கப் பிரசாரத்தில் இறங்கிவிட்டன். ரேடியோ, சினிமா, ஜோசியம், புராணம், உற்சவம், காலட்சேபம் ஆகியவைகளையே விளம்பரம்செய்யும் சாதனங்களாக ஒன்று கூடவிலக்கில்லாமல் எல்லா பத்திரிகைகளும் விளங்குகின்றன. இராஃடிரபதி, கவர்னர் உட்பட எல்லா மந்திரிகளும் கோவில், பக்தி பிரசாரம் செய்து வருகின்றார்கள் . அதிகாரிகள் நியமனம் பெறவும், தங்கள் குற்றங்களை மறைத்துக் கொள்ளவும், பிரமோஷன்கள் பெறவும் மந்திரிகளையே தான் பின்பற்றுகிறார்கள். காங்கிரசிலுள்ள மெம்பர்கள், காங்கிராஸ்காரர்கள் 100க்கு 90க்கு மேற்பட்டவர்கள் தங்களின் உண்மை நிலையையும், நிறத்தையும் மறைத்துக் கொள்ள மநிதிரிகளைப் பின்பற்றுவதுடன் பக்த கோடிகளாக விளங்குகிறார்கள். சமுதாய நலம் காரணமாகவே பார்ப்பனர்கள் கூண்டோடு காங்கிரசை ஒழித்துக்கட்ட, தோல்வியடையச் செய்ய பாடுபட்டாலும் , அப்பார்ப்பன சமுதாய நலத்திற்கேற்ப எல்லாக் காரியங்களையும் நமது ஆட்சி மூலம் நிறைவேற்றிக் கொள்ள மந்திரிகளும், அதிகாரிகளும், காங்கிரஸ்காரர்களுமே தெரிந்தோ, தெரியாமலோ அவர்களுக்கு எல்லாவித உதவியான காரியங்களையும் செய்து வருகிறார்கள்.
இயக்கமும் ஆதரவும் பெருகி வருகிறது
இந்த நிலையில் எனது தொண்டு இப்படிப்பட்ட காங்கிரசை, மந்தரிகளை, அதிகாரிகளை “பாதுகாப்பதற்கு” என்பதல்லாமல் வேறு எதற்குப் பயன்படக் கூடுமென்பது எனக்கு விளங்கவில்லை. இந்த நிலையில் எனக்குள்ள ஒரே ஆறுதல் என்னவென்றால் இவ்வளவு எதிர்ப்பிலும், ஏமாற்றத்திலும் எனது தொண்டுக்கு சாதனமாகவிருக்கும் சுயமரியாதை இயக்கதிலும், திராவிடர் கழகத்திலும் சுயநலமற்று தன்னலத் தியாகத்துடன் எவ்வித பிரதிப்பிரயோஜனத்தையும் எதிர்பாராமல் ஒழுக்கம், நாணயம் என்பதில் இருந்து சிறிதும் வழுவாமல் தமிழ்நாட்டில் சென்னை முதல் குமரி வரை ஒவ்வொரு குறிப்பிட்ட இடங்களிலும் ஆர்வமும் முயற்சியும் உள்ள தோழர்கள் நல்ல அளவுக்கு இருந்து எனக்கு ஆதரவளித்து உற்சாக மூட்டுவதுடன், நெறி தவறாமல், படிந்து தொண்டாற்றவது தான் எனக்கு உயிரூட்டி சலிப்படையாமல் உழைக்கச் செய்து வருகிறது. மேலும் நமது இயக்கத்தால் உழைப்பால் மனித சமுதாயத்தின் நடத்தையில் பெரிய மாறுதல் ஏற்பட்டுவிடவில்லை என்றாலும் பெருவாரியான மக்களுக்கு மனமாற்றம் ஏற்பட்டிருப்பதை உணருகிறேன். மற்றும் நம் எதிரிகளான பார்ப்பனர் “ எங்கள் நிலைமை இப்போது சீரடைந்துவிட்டது, இனி பயப்படத் தேவை இல்லை” என்று சொன்னாலும் அது வாயளவில் கொள்ளும் தைரியமே அல்லாமல் மன அளவில் அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் நடத்தையில், முயற்சியிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
பக்தி மூலம் பணவிரயம் கொஞ்சமா ?
இன்று என்றுமில்லாத அளவுக்கு கோவில் திருப்பணி, கோயில் உற்சவம், கோவில் கும்பாபிசேகம், புதுக்கோவில் உண்டாக்குதல், புராணப் பிராசாரம் செய்தல், கவர்னர், மந்திரி முதலியவர்களை ஸ்தல யாத்திரை செய்யச் செய்தல், இவைகளைப் பற்றிய விளம்பரங்களைப் பெரிய அளவில் செய்தல், பத்திரிகைகளில் எல்லாம் கடவுள் பிரசாரம், கடவுள் கதைப் பிரசாரம், மதப் பிரசாரம், சாஸ்திர தர்ம பிரசாரம், பஜனை, காலட்சேபம் செய்தல் முதலிய காரியங்களில் எப்போதையும் விட அதிகமாக மிக மிக அதிகமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.அரசாங்கத்தில் இன்று மக்களின் மூடநம்பிக்கையால், முட்டாள்தனத்தினால் சமுதாயத்தில் மிக மிக சிறுபான்மையராகிய “பெரிய ஜாதியாரும்” பணக்காரர்களும் “பெரிய படிப்புக்காரர்” என்பவர்களுமே சூழ்ச்சியால் பெரிதும் மந்திரிகளாக இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு ஒட்டு செய்பவர்கள் இவர்களைகப் பேல் 30 பங்கு அதிகமான சமுதயாத்தில் கீழ்நிலையிலிருக்கும் மக்களாக இருக்கிறார்கள் ஆனதால் மக்களை மூடநம்பிக்கையிலிருந்து ஈடேறாமல் செய்து மேலும் மேலும் மடையர்களாக ஆக்கி இன்றுள்ள நிலைமையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே செய்கிறார்கள் என்றால் மேல்நிலையிலுள்ள சிறுபான்மையோருக்கு பயம் வந்துவிட்டது, பயத்தால் துடிக்கிறார்கள் என்று தானே ஏற்படுகிறது ?
மக்கள் அறிவுபெறச் செயதல் அவசியம்
நாட்டில் படிக்காதநல்ல படிப்பு வாசனை அற்ற மக்கள் 100க்கு 80 பேர் இருக்கிறார்கள். அதுபோலவே உழைப்பாளி ஏழை மக்கள் 100க்கு 80 பேர் இருக்கிறார்கள். சமுதாயத்தில் கீழ்ஜாதி மக்கள் எனப்படுவோர் 100க்கு 90க்கு மேற்பட்டமக்கள் இருக்கிறார்கள்.இந்த நிலையில் மேல்ஜாதிக்காரர்களும், பணக்காரர்களும், படித்தவர்கள் என்று சொல்லப்படுபவர்களும் ஆட்சியிலும், ஆதிக்கத்திலும் இருக்கிறார்கள் என்றால் இந்த நிலையை ஜனநாயக சுதந்தரமென்றால் மேலே குறிப்பிட்டபடி இதற்கு மக்களின் முட்டாள்தனமும், மூடநம்பிக்கையுமல்லாமல் வேறு என்ன காரணம் சொல்லமுடியும் ? ஆதலால் தான் மக்கள் அறிவு பெற்றுச் சுயமரியாதைக்காரர்களாகி விட்டால் தங்களின் இன்றைய நிலை என்ன ஆவது என்கின்ற பயம் ஆதிக்கக்காரர்களுக்கு ஏற்படும் அளவுக்காவது நமது தொண்டு பயன்பட்டிருக்கிறது என்று சொல்லித்தானாக வேண்டும் , என்றாலும் செய்ய வேண்டிய அளவுக்கு நாம் செய்ய வேண்டியதைச் செய்யவில்லை. இமயமலை பனிக்கட்டியால் குளிரில் அவஸ்தைப்படுகிறது என்று கருதி சால்வையை மலைக்கு போர்த்துகிறவனைப் போல் நாம், காங்கிரைச “காப்பாற்று’கிற வேலையில் ஈடுபட்டுக் சமயத்துறையில் பெரிய அளவுக்கு ஏற்பட்டிருக்க வேண்டிய நன்மையை மாறுதலை இழந்துவிட்டோம் என்பதை நாம் ஒப்பக்கொண்டுதானாக வேண்டும்.
காங்கிரசை எதிர்த்திருந்தால் வகுப்பகித முறை வந்திருக்கும்
நாம் காங்கிரசை “காப்பாற்றும்” தொண்டில் இறங்காம லிருந்து இந்த 10-12 வருடத்தில் காங்கிரசை எதிர்த்து இரண்டு மூன்று முறை பதினாயிரக்கணக்கில் சிறை சென்றிருந்தால் “வகுப்புவாரி பிரதிநிதிதவ' முறையில் கணடிப்பாய் நல்ல அளவிற்கு வெற்றி பெற்றிருப்போம். கல்வித்துறையில் மேலும் முன்னுேறி இருப்போம். சமுதாயத்துறையில் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகவும், முழுஆலயப் பிரவேசம் முதலிய உரிமை பெறவுமான பல உரிமைகளை பெற்றிருப்போம். நீதித்துறையில் வக்கீல்களின் தொல்லையை நல்ல அளவுக்கு குறைத்துக் கொண்டிருப்போம். இந்த காரியங்கள் ஈடேறாமல் இருப்பதற்குக் காரணம் நமது கவனத்தை வேறு வழியில் திருப்பிக் கொண்டது பெரும் காரணமாகும். இப்போதும் நாம் இனியும் ஒன்றரையாண்டு காலத்திற்கு 18 மாதங்களுக்கு இந்தப் போக்கிலேயே இருக்க வேண்டியவர்களாய் இருப்பதால் அதற்குள் நமது நலம் வெகுதூரம் பாதிக்கப்பட்டு எதிரிகள் மிகவும் வளர்ந்து விடுவார்களோ என்று அச்சப்பட வேண்டியவர்களாகத்தான் இருக்கிறோம். நமது தொண்டுக்காக நமக்கு நமது இலட்சியத்திற்குச் செய்யாவிட்டாலும், நன்றிகாட்டாவிட்டாலும் நமது லட்சியத்திற்குக் கேடு பயக்கும் பணியையாவது காங்கிரஸ் ஆட்சி செய்யாமலிருக்கலாம். ஆனால் அபபடிக்கில்லாமல் நம்மால் காங்கிரசுக்கு, ஆட்சிக்கு “ஒரு பயனும் ஏற்படவில்லை தொல்லைகள் தாம் ஏற்படுகிறது” என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறபோது நமது நிவர்த்தி இல்லாத முட்டாள்தனத்தைப் பற்றி வெட்கப்பட வேண்டியதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
இன்று காங்கிரசுக்கு எதிராக எப்படியாவது காங்கிரசை, காங்கிரஸ் ஆட்சியை ஒழித்துக் கட்டுவது என்கின்ற இலட்சியத்தில் பொதுமக்களுக்கும், ஆட்சிக்கும் எவ்வளவோ கொடுமைகளையும் துரோகங்களையும் நாசங்களையும் நட்டத்தையும் கொடுத்து வரும் எதிர்க்கட்சிக்காரர்கள் இந்த ஆட்சியினால் மரியாதையும் பெருமையும் பெற்று வருகிறார்கள். எனவே நமது தொண்டு, எனது தொண்டு எதிரிகள் நகைக்கும்படியான பலனளித்தது என்று சொல்லி வெட்கப்படுகின்றேன்.
ஆகவே இனி நமது தொண்டு காங்சிரசுக்கு அடுத்து வரும் தேர்தலில் நல் வெற்றி கிடைக்கும்படிச் செய்ய வேண்டியது பெருங்கடமையானாலும் அதோடு அதைவிட பெருங்கடமையாகக் கொண்டும் தொண்டாற்ற வேண்டியவனாக இருக்கிறேன் - இருக்கிறோம் என்பதை கழகத் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
ஈ.வெ.ராமசாமி
No comments:
Post a Comment