Sunday, 17 September 2017

தந்தை பெரியார் 88-வது பிறந்தநாள் செய்தி



தந்தை பெரியார் 88-வது பிறந்தநாள் செய்தி


எனது விண்ணப்பம்

எனக்கு இன்று (17-9-66 பராபவ புரட்டாசி2ம் தேதி) முதல் 88-ம் ஆண்டு பிறக்கிறது. நான் பேராசைக்காரனாக இல்லாமல், இயற்கையை ஒரளவுக்காவது உணர்ந்தவனாக இருப்பவனானால் உங்கள் எல்லோரிடமும் முடிவுப் பயணம் சொல்லிக் கொள்ள வேண்டியவயேயாவேன்.
அது மாத்திரமல்லாமல் நான் சிறிதளவாவது பகுத்தறிவு உடையவனாகயிருந்தால் என் வாழ்வில், எனது இலட்சியத்தில் முழு திருப்தியடைந்து ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டியவனாவேன்.
என் உடலைப் பற்றிய எவ்வித கவலையும் இன்றி, நேர்ந்தபடி நடந்து, கிடைத்ததையெல்லாம் நேர் கூறு இன்றி உண்டு அனுபவித்து வந்த நான் 87 ஆண்டு முடிந்து 88-ம் வயதில் புகுகின்றேன் என்ற அதிசயத்தை நினைத்துத்தான் இனிமேலும் வாழ ஆசைப்படுவது பேராசை என்று குறிப்பிட்டேன்.
இலட்சிய வெற்றியிலேயே திருப்தி
அதுபோலவே தான் ஒரு சார்பும் இல்லாதவனாக தனித்து எந்த ஒரு ஆதரவும் அற்றவனாகி என்னையே எண்ணி நின்று பாமர மக்களுடையவும்,படித்தவர்களுடையவும், பிறவி ஆதிக்காரர்களாகிய பார்ப்பனருடையவும், சாவ் சக்தி உள்ள பத்திரிகைகாரர்களுடையவும், போராக்குறைக்கு அரசாங்கத்தாருடையவும் வெறுப்புக்கும், அதிருப்திக்கும், எதிர்ப்புக்கும், விஷமப்பிரசாரத்திற்கும், ண்டனை கண்டனைகளுக்கும் ஆளாக இருந்து, எதிர்ப்பையும், போராட்டங்களையும், சூழ்ச்சிகளையும் சமாளித்து பொதுமக்களால் கனவு என்று கருதப்பட்ட எனது இலட்சியங்களைஇவை கனவு அல்லஉண்மை நினைவேகாரிய சாத்தியமேஎன்று கூறிவந்து அவை (எனது இலட்சியங்)களின் நடப்புகளையும், நடப்புக்கு ஏற்ற இலட்சியத்தில் என் தகுதிக்கு ஏற்ற அளவில் முழுதிருப்தி அடைகிறேன் என்று குறிப்பிட்டேன்.
விளக்கம்

நான் காங்கிரசிலிருந்து விலகிய
1925-ம் ஆண்டிலேயே அன்றைய நிலைமைகளைக் கருதிஇனி இந்தியாவின் ஆட்சி ஜனநாயகமாகத்தான் இருக்க வேண்டும்என்று இந்த நாட்டில் முதல் முதல் கருதியவன் நான் தான். அதற்கு ஆதாரம் 1919-ல் நான் துவக்கியகுடி அரசுஎன்று பெயர் வைத்தது.
 
ஜனநாயகம்எனபது வடமொழி. அதற்கு நேரான தமிழ் மொழி தான்குடி அரசுஎன்பது.
காங்கிரசின் கொள்ளையெல்லாம் 1885 முதல் 1945 வரை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் குடியேற்ற நாட்டு அந்தஸ்து இதற்கு காந்தியார் விளக்கம் சொன்ன போதுமக்கள் இஷ்டப்படி பிரிட்டிஷ் சர்க்கார் ஆட்சி நடைபெற வேண்டும்என்று கூறினார்.
காங்கிரசில் ஒரு சிறு சாரார் தங்களை தீவிரவாதிகளாக மக்கள் கருத வேண்டும் என்ற கருத்தில்இந்தியாவுக்கு வேண்டியது பூரண சுயராஜ்யம்என்று சிலர் கூறி வந்தார்கள். இவையெல்லாம் கூட“குடி அரசுபத்திரிகை பிரசாரம் ஆரம்பித்த 10, 15 ஆண்டுகளுக்கு பிறகு தான்.
இந்த பிரச்னை அமுலுக்கு எடுத்தக் கொள்ளப்பட்டது போல் 1950 வாக்கில்இந்திய ஆட்சி ஜனநாயக ஆட்சியாக இருக்க வேண்டுமென்று பிரகடனப்படுத்தப்பட்டு விட்டது.


40 ஆண்டுகட்கு முன்பே சமதர்மம் கோரி பிரசாரம்
குடி அரசு ஆட்சியின் கொள்கை சமதர்மமாக இருக்க வேண்டுமென்று 1927, 1928ம் ஆண்டிலேயுே சுயமரியாதை இயக்க மாநாடுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றி 1930ம் ஆண்டு ஈரோடு மாநாட்டில் சமதர்மத்திற்கு விளக்க தீர்மானங்களாக :
ஒரு நபர் ஒன்றுக்கு 5 ஏக்கர் நிலத்திற்கு மேல் இருக்கக்கூடர்து என்றும், அதுவம் உழுகிறவனுக்குத் தான் நிலம் இருக்க வேண்டுமென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.1934ம் ஆண்டு சென்னை விக்டோரியா மண்டபத்தில் நடந்த ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் சுயமரியாதை இயக்க தீர்மானமாக சமதர்ம தீாமானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

அதோடு மாத்திரமல்லாமல் பொது உடைமைக் கொள்கைகளும் பிராசாரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது.
இவற்றை ஏன் இப்போது குறிப்பிடுகிறேன் என்றால் மேலே குறிப்பிட்ட எனதுகனவுகளை நினைவாக, நேரிடையாக செயல்படவிருக்கும் நிலையை மக்களுக்கு தெரிவிக்கவும், இவைகள் எனக்கு எதிர் காலத்தைப் பற்றி திருப்தி அளிக்கக் கூடியவையல்லவா என்பதை விளக்குவதற்கேயாகும்.
மற்றும் பண்டங்கள் உற்பத்தி செய்பவர்களுக்கும், உபயோகிப்போருக்கும் இடையில் எந்த உருவ தரகர்களும் இருக்கக்கூடாது என்பதும் ஈரோட்டு தீர்மானமாகும். அதுவும் நல்ல அளவுக்கு அமுலில் வர இருக்கிறது.
கல்வி இலட்சியம் நிறைவேறிவிட்டது
கல்வி விஷயம் எனது இலட்சியத்திற்கு மேலாகக் கூட போகும் போல் இருக்கிறது !அதாவது பி.யூ.சி. அன்றைய பத்தாவது வகுப்பு இன்றையபதினொன்றாவது'வகுப்பு வரை தான் சர்க்கார் அளிக்கும் இலவசக் கல்வியாக இருக்க வேண்டும். மற்ற உயர்தரக் கல்வி  தேவை உள்ள ஆள்களுக்கு மாத்திரம் சார்க்கார் கல்வி அளித்துவிட்டு பொதுமக்களை (எல்லாச் செலவும்) தங்கள் தங்கள் செலவிலேயே கற்று வரும்படி செய்ய வேண்டும். உயர்தரக் கல்விக்கு (காலேஜ் கல்விக்கு) சர்க்கார் ஒரு காசும் செலவு செய்யக்கூடாதுஎன்று சுயமரியாதை இயக்க மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறேன். ஆனால் அது அன்று எல்லா மக்களுக்கும் எல்லா செலவுகளும் சர்க்காரே ஏற்று இலவசக் கல்வியாக ஆக்கப் போவதாக தெரிகிறது.
எனவே நான் எனது இலட்சியத்தில் மனக்குறையுடைய வேண்டிநிலையில்லாதவனாக இருக்கிறேன்.இதை 45 மாதங்களுக்கு முன் காமராஜர் புகழ்ச்சியோடு வெளியிட்டார்.அதாவது
பெரியாருக்கு இன்று என்ன குறை? அவர் போட்ட பாதையில் தான் இன்று காங்கிரஸ் போய்க் கொண்டிருக்கிறது ; அவர் எதற்கும் கவலைப்படத் தேவையில்லைஎன்பதாகப் பேசினார்.

மக்களின் கவலையற்ற தன்மையே என் மனக்குறை
இனி எனக்கேதாவது குறை,கவலை இருக்குமானால் அது மக்கள் இடையில் காணப்படும் கவலையற்ற தன்மையும், எதிரிகளின் சூழ்ச்சிக்கு ஆளாகும் தன்மையும் பற்றித்தான். இந்த நிலைமை காரியத்தைக் கெடுக்கும்படியான அவ்வளவு பலம் அடைய என்றுமே முடியாது என்பதோடு, அதிக காலம் நிலைக்கவும் முடியாது. ஆகையால் அதை ஒரு குறையாகக் கருத வேண்டியதில்லை. ஆனால் சண்டித் தொல்லையாகக் கருதுகின்றேன். மனிதன் துன்பத்திற்கு ஆளாகாவிட்டாலும் தொல்லைக்கு ஆளாவது சகஜம்தான்.


புரடசிக்கு தயாராயிருங்கள் !
எனது அருமைத் தோழர்களுக்கு தேர்தல் முடியும் வரை காங்கிரசை நிபந்தனை இன்றி ஆதரித்து காங்கிரஸ் முழு வெற்றியடையப் பாடுபட வேண்டுமென்பது தான் எனது கட்டளை போன்ற விருப்பமாகும். தேர்தலுக்குப் பிறகு பெரிய புரட்சிப் பணி நமக்கு இருக்கிறது. அதற்குள் தோழர்கள் தங்கள் குடும்பப் பணிகளையும் முடித்துக்கொண்டு போர் முனைக்குச் செல்லும் போர்வீரன் போல் தாய்,தந்தை,மனைவி,மக்களிடம் பயணம் சொல்லிக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்.

ஈ.வெ.ராமசாமி


No comments:

Post a Comment